உங்ககிட்ட எவ்வளவு சொத்து இருக்கு? தங்கத்தை வைத்து தொழிலதிபர் சொல்லும் புது கணக்கு!

சில கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பை செய்திகள் வாயிலாக கேட்டிருப்போம். அதேபோல தனி நபர்கள் தங்களுடைய சொத்து மதிப்பை எப்படி தெரிந்து கொள்வது என்பதற்கான புதிய முறையை பிரேம் சோனி என்ற தொழிலதிபர் கூறியுள்ளார். அவருடைய கூற்றுப்படி ஒருவரின் சேமிப்பு, செலவுகள் மற்றும் சொத்துக்களை ரூபாய் மதிப்பில் கணக்கிடுவதற்கு பதிலாக தங்கத்தின் எடையை கொண்டு கணக்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பிரேம் சோனி.. அன்றாடத் தேவைகள் முதல் முக்கியமான செலவுகள் வரை அனைத்திற்கும் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை தங்கத்தை வைத்து கூறியுள்ளார். அவருடைய கணக்கீட்டின்படி 1 கிராம் தங்கத்தை கொண்டு ஒரு நல்ல ஜோடி காலணியை வாங்கலாம் அல்லது நல்ல ஹோட்டலில் டின்னரை முடிக்கலாம். அதே போல 10 கிராம் தங்கம் இருந்தால் ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது இருசக்கர வாகனத்தை வாங்கலாம். 50 கிராம் தங்கம் இருந்தால் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரலாம். 100 கிராம் தங்கம் இருந்தால் தினசரி பயன்பாட்டிற்கு ஒரு கார் வாங்கலாம்.

உங்ககிட்ட எவ்வளவு சொத்து இருக்கு? தங்கத்தை வைத்து தொழிலதிபர் சொல்லும் புது கணக்கு!

250 கிராம் தங்கம் இருந்தால் குழந்தையின் கல்லூரி படிப்பை சிரமமின்றி முடிக்கலாம். 500 கிராம் தங்கம் இருந்தால் அவசர மருத்துவ தேவைகளுக்கு சேமிப்பாக பயன்படுத்தலாம். 1,000 கிராம் அதாவது 1 கிலோ தங்கம் இருந்தால் கடன் இல்லாமல் சொந்த வீடு வாங்கலாம். 5000 கிராம் தங்கம் (5 கிலோ) தங்கம் இருந்தால் அதுதான் நிதி சுதந்திரம்.

Also Read

அதிகமாக சம்பளம் வாங்குவது மட்டுமே ஒருவருக்கு பணக்காரர் என்ற அந்தஸ்தை வழங்கி விடாது என்பது தான் இவருடைய முக்கிய கருத்து. இன்று பலர் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் மற்றும் ஈஇஎம்ஐ-யில் சிக்கி தவிக்கிறார்கள். விலை உயர்ந்த போன், ஈஎம்ஐ, கார், வங்கிக் கடனில் வீடு ஆகியவை சிலரிடம் இருக்கிறது. ஆனால் அவசரத்திற்கு உதவக்கூடிய சேமிப்பு குறைவாக இருக்கிறது. இதனால் வெளியில் பணக்காரர் போல தெரிந்தாலும் அவரிடம் உண்மையிலேயே இருக்கும் சொத்து மதிப்பு குறைவாகத்தான் உள்ளது. எனவே மாத சம்பளத்தை மட்டும் பார்க்காமல் எதிர்காலத்திற்கு எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும்.

1990-ஆம் ஆண்டில் 300 கிராம் தங்கத்தை வைத்து ஒரு காரை வாங்கலாம். ஆனால் இன்று 100 கிராம் தங்கம் இருந்தாலே ஒரு நல்ல காரை வாங்கிவிட முடியும். அதேபோல வெளிநாட்டு விமான பயணத்திற்கு அன்றைய 80 கிராம் தங்கம் தேவைப்பட்ட நிலையில்.. இன்று 5 கிராம் தங்கம் இருந்தால் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்து சென்றுவிடலாம்.

NDTV தரவுகளின் படி 1990-இல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.3451-ஆக இருந்தது. ஆனால் 2025 முதல் 2026-ஆம் ஆண்டில் அதே 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை ரூ.1,18,421 ஆக உயர்ந்துள்ளது. 1990-இல் மாருதி 800 காரின் விலை ரூ.1.27 லட்சம். அன்றைய மதிப்பில் சுமார் 370 கிராம் தங்கத்திற்கு இந்த விலை சமம். ஆனால் 2016-ஆம் ஆண்டில் அறிமுகமான ஐபோன் 7 வாங்க நாம் 20 கிராம் தங்கத்தை வைத்திருந்தாலே போதுமானது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோன் 17 ப்ரோ மேக்ஸை வாங்க இன்றைய தங்கத்தின் மதிப்பில் 12 கிராம் தங்கம் இருந்தாலே போதும். பணத்தையும், சேமிப்பையும் மக்கள் பார்க்கும் விதத்தை மாற்ற வேண்டும் என்பதே பிரேம் சோனியின் கருத்து. அதிக சம்பளத்தை வாங்குவதை நினைத்து பெருமைப்படுவதை விட நீண்ட காலத்திற்கு வாழ்க்கை செலவுகளை தாங்கும் அளவுக்கு சேமிப்பு உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும்.

அதற்காக பணத்தை முழுமையாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. தங்கமும் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் உச்சத்தை தோட்ட தங்கத்தின் விலை நவம்பர் மாதத்தில் 36 சதவீதம் வரை சரிந்துள்ளது. தங்கம் பிற முதலீடுகளைப் போல உத்தரவாதமான மற்றும் தொடர்ச்சியான வருமானத்தை தராது.

தங்கத்திலேயே முழு முதலீட்டையும் முடக்காமல் பணத்தின் மதிப்பு எப்படி மாறுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக சொன்னால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வைத்திருப்பவர் பணக்காரர் ஆகிவிட முடியாது. கடன் இல்லாமல் எவ்வளவு சேமிக்கிறோம், செலவுகளை எப்படி சமாளிக்கிறோம் என்பதில் தான் உண்மையான செல்வம் ஒழிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+