இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஹெச்டிஎப்சி வங்கி இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது மட்டும் அல்லாமல் வர்த்தக பிரிப்பு, நிர்வாக மாற்றம் என அனைத்தும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முன்னிலையில் சோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று ஹெச்டிஎப்சி வங்கி பங்கு விலை ரியாக்ஷன் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஹெச்டிஎப்சி வங்கி அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் இவ்வங்கியின் அட்வான்சஸ் 57.7 சதவீதம் அதிகரித்துள்ளது, இதன் மூலம் 14.93 கோடி ரூபாயில் இருந்து 23.54 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் HDFC உடனான இணைப்பிற்கு பின்பு ஹெச்டிஎப்சி வங்கி வரலாறு காணாத வகையில் சுமார் 48000 கோடி ரூபாய் அளவிலான ஹோம் லோன் கொடுத்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி-யின் டெபாசிட் தொகை செப்டம்பர் காலாண்டில் 29.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 16.73 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 21.73 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் ரீடைல் கடன் அளவுகள் 111.5 சதவீதமும், வர்த்தகம் மற்றும் கிராமப்புற கடன்கள் பிரிவில் 29.5 சதவீதமும், கார்பரேட் மற்றும் ஹோல்சேல் கடன்கள் 8 சதவீதம் வரையிலான வருடாந்திர வளர்ச்சியை அடைந்துள்ளது.
2024 ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கி-யின் CASA எனப்படும் கரன்ட் அக்கவுன்ட் மற்றும் சேவிங்கஸ் அக்கவுன்ட்-ல் சுமார் 8.17 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகை டெபாசிட் ஆக உள்ளது. இது முன்பு இருந்த 7.59 லட்சம் கோடி ரூபாயை ஒப்பிடுகையில் 7.6 சதவீத வருடாந்திர உயர்வாகும்.
ஹெச்டிஎப்சி வங்கி தலைமை நிர்வாக அதிகாரியான சஷிதர் ஜகதீஷன் தலைமையிலான நிர்வாகம் இவ்வங்கியின் சில்லறைக் கடன்களை அடமானம் மற்றும் அடமானம் அல்லாத பிரிவுகளாகப் தனித்தனியாக பிரித்துள்ளது. இப்பிரிவுகளை நிர்வாகம் செய்ய தனித்தனி தலைவர்களை நியமிக்கப்பட உள்ளனர்.
அரவிந்த் கபில் இனி அடமானக் கடன் வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய உள்ளார். இதில் ஹோம் லோன், சொத்துக்களுக்கு எதிரான கடன், HDFC-யின் விற்பனை பிரிவு ஆகியவற்றை நிர்வாகம் செய்ய உள்ளார். இதேபோல் அரவிந்த் வோஹ்ரா என்பவர் அடமானம் அல்லாத கடன் பிரிவை நிர்வாகம் செய்ய உள்ளார். இதில் பாதுகாப்பற்ற கடன், சிறு வர்த்தக கடன், வாகன கடன் ஆகியவை அடங்கும்.
இதை தாண்டி பல நிர்வாக மாற்றங்கள் ஹெச்டிஎப்சி வங்கியில் செய்யப்பட்டு உள்ளது. ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பிற்கு பின்பு முதல் காலாண்டு முடிவுகள் இது என்பதால் அனைத்து பிரிவுகளிலும் பெரிய அளவிலான வளர்ச்சி காட்டப்பட்டு உள்ளது.
அடுத்த காலாண்டில் செப்டம்பர் காலாண்டு அளவுகளை ஒப்பிடும் போது தெளிவான நிலை முதலீட்டாளர்களாக கண்டறிய முடியும். இதேபோல் அடுத்த காலாண்டு என்பது பண்டிகை காலத்தால் அதிகப்படியான வர்த்தகம் பெற கூடிய ஒரு காலக்கட்டமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications