இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக விளங்கும் HDFC வங்கி சனிக்கிழமை டிசம்பர் 31, 2022 உடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியீட்டை ஐடி சேவை நிறுவனங்கள் வழக்கம் போல் துவக்கி வைத்த நிலையில், தற்போது வங்கி மற்றும் ரீடைல் சேவை நிறுவனங்கள் வெளியிடத் துவங்கியுள்ளது.
வீட்டுக் கடன் நிறுவனமான HDFC லிமிடெட் மற்றும் மிகப்பெரிய தனியார்த் துறை வங்கியான HDFC வங்கி ஆகியவை 2022 இல் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இணைப்பு மூலம் 40 பில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுக்க உள்ளது இக்கூட்டணி.
நிகர லாபம்
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் HDFC வங்கியின் நிகர லாபம் 18.5 சதவீதம் உயர்ந்து 12,259 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஹெச்டிஎப்சி வங்கி 10,342 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பதிவு செய்திருந்தது.
ஹெச்டிஎப்சி வங்கி பங்கு விலை
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் ஹெச்டிஎப்சி வங்கி பங்கு விலை 1,601 ரூபாயாக இருந்தது. 2023 ஆம் ஆண்டில் முதல் 15 நாளில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 1.70 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வட்டி வருமானம்
டிசம்பர் 31 உடன் முடிவு அடைந்த காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர வட்டி வருமானம் கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது. இதன் மூலம் வட்டி வருமானம் 18,443.5 கோடி ரூபாயில் இருந்து 22,987.8 கோடி ரூபாயாக உள்ளது.
மார்ஜின் அளவீடு
மேலும் ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த சொத்துக்களில் Core net interest மார்ஜின் 4.1 சதவீதமாகவும், வட்டி ஈட்டும் சொத்துக்களின் அடிப்படையில் 4.3 சதவீதமாக உள்ளது என இக்காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிகர வருவாய்
டிசம்பர் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர வருவாய் 26,627 கோடி ரூபாயில் இருந்து 18.3 சதவீதம் அதிகரித்து 31.487.7 கோடி ரூபாயாக உள்ளது. இதே காலகட்டத்தில் ஆப்ரேட்டிங் செலவுகள் கடந்த ஆண்டு 9,851.1 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 26.5 சதவீதம் அதிகரித்து 12,463.6 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
செயல்படாத சொத்துகள்
HDFC வங்கியின் சொத்துத் தரம் முந்தைய மூன்று மாதங்களில் இருந்து எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிலையாக உள்ளது. இதன் மூலம் இவ்வங்கியின் மொத்த செயல்படாத சொத்துகள் (NPA) விகிதம் 1.23 சதவீதமாக உள்ளது. இதேபோல் நிகர NPA விகிதம் 0.33% ஆகவும் மாறாமல் உள்ளது.
கடன்கள் வளர்ச்சி
வங்கியின் மூன்றாம் நிதியாண்டின் அட்வான்சஸ் அளவு 19.5 சதவீதம் உயர்ந்தது, ரீடைல் கடன்கள் 21.4 சதவீதம் அதிகரித்துள்ளது. வணிக மற்றும் கிராமப்புற வங்கிக் கடன்கள் 30.2 சதவீதம் அதிகரித்தும், பிற ஹோல்சேல் கடன்கள் 20.3 சதவீதம் உயர்ந்தன.
வட்டி விகிதம்
இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப் லிமிடெட் (HDFC)டிசம்பர் 20 முதல் அதன் ரிடைல் ப்ரைம் லென்டிங் ரேட் (RPLR) அளவை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மார்ச் காலாண்டில் கூடுதல் வருமானம் பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications