இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் HDFC வங்கியின் தலைமை நிர்வாகி சஷிதர் ஜகதீஷன் செவ்வாய்க்கிழமை வங்கியின் ஒருங்கிணைப்புக்கு பின்பு சிறப்பாக செயல்பட உதவுவதற்காக சிஇஓ-வாக தனது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவத்திலும், 2வது முறையாக பணியில் அமர்த்தப்பட்ட நிலையிலும் முக்கியமான மாற்றத்தை வெளியிட்டார்.
சமீபத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் வராக் கடன் அதிகரித்திருப்பது குறித்து பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட நிலையில் சஷிதர் ஜகதீஷன் இந்த பிரச்சனையை விரைவாக தீர்க்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் சில்லறை கடன் வர்த்தகத்தை பெரிய அளவில் மேம்படுத்தி, வங்கியில் குவிந்திருக்கும் டெபாசிட் தொகையை சிறப்பாக கையாள வேண்டும் என்ற முடிவுக்கு ஒட்டுமொத்த நிர்வாகமும் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் தலைமை நிர்வாக அதிகாரியான சஷிதர் ஜகதீஷன் சில்லறைக் கடன்களை அடமானம் மற்றும் அடமானம் அல்லாத பிரிவுகளாகப் பிரித்துள்ளார். மேலும் இதற்காக இரண்டு குழுத் தலைவர்கள் மற்றும் கிளை வங்கிக்கான இரண்டு பிராந்தியத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர் என தெரிவித்தார்.
அதாவது ரீடைல் லோன் பிரிவு இனி அடமானம் வைத்து அளிக்கப்படும் கடன் ஒரு பிரிவாகவும், அடமானம் அல்லாமல் கடன் வழங்கும் வர்த்தகத்தை ஒரு தனிப்பிரிவாகவும் இயக்கப்பட்ட உள்ளது. முன்பு தனித்தனி வங்கிகளாக இருந்து செயல்பட்டதை போலவே, இப்போது ஓரே வங்கிக்குள் தனித்தனி பிரிவுகளாக இயங்க உள்ளது.
இந்தியாவிலேயே 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சந்தை மதிப்பு கொண்ட ஓரே வங்கி ஹெச்டிஎப்சி தான். கடந்த 30 வருட ஹெச்டிஎப்சி வங்கி பணியில் சஷிதர் ஜகதீஷன் 2வது சிஇஓ. இதனால் நிர்வாக அடிப்படையில் பல சவால்கள் உள்ளது, இதேவேளையில் வர்த்தகத்திலும், வளர்ச்சியிலும் இந்த மாற்றம் பெரிய அளவில் மேம்படும் என சஷிதர் ஜகதீஷன் கூறியுள்ளார்.
ஹெச்டிஎப்சி வங்கி உடன் ஹெசிடிஎப் இணைக்கப்பட்ட பின்பு, ஹெச்டிஎப்சி வங்கியின் வாரக் கடன் அளவு அதிகரிக்க துவங்கியது. ஜூன் 30 ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர வாரக் கடன் சொத்துக்கள் 1.2 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி 1.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஹெச்டிஎப்சி-யிடம் இருந்து வந்த கூடுதலான பணப்புழக்கத்தின் வாயிலாக ஹெச்டிஎப்சி வங்கியின் NIM என அழைக்கப்படும் Net Interest Margins அளவு குறைய உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியின் NIM அளவு ஜூன் 30ல் 4.3 சதவீதமாக இருந்தது, இணைப்பிற்கு பின்பு இது 3.9 முதல் 4 சதவீதமாக குறையலாம் என கணக்கப்பட்டு உள்ளது.
இந்த பிரச்சனை ஹெச்டிஎப்சி வங்கி பங்கு மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வர்த்தக மாற்றம் மூலம் வேகமாக வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்ய முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications