இந்தியாவிலேயே 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சந்தை மதிப்பு கொண்ட ஒரே வங்கி ஹெச்டிஎப்சி தான், இதுமட்டும் அல்லாமல் உலகளவில் பெரும் வங்கிகள் பட்டியலில் ஹெச்டிஎப்சி வங்கி இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி உடன் ஹெசிடிஎப் இணைக்கப்பட்ட பின்பு, ஹெச்டிஎப்சி வங்கியின் வாரக் கடன் அளவு அதிகரிக்கவும், NIM என அழைக்கப்படும் Net Interest Margins அளவு குறைய துவங்கியது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது இதை சரி செய்ய நிர்வாக அடிப்படையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் உயர்மட்ட நிர்வாகத்தில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஹெச்டிஎப்சி வங்கி தலைமை நிர்வாக அதிகாரியான சஷிதர் ஜகதீஷன் தலைமையிலான நிர்வாகம் இவ்வங்கியின் சில்லறைக் கடன்களை அடமானம் மற்றும் அடமானம் அல்லாத பிரிவுகளாகப் தனித்தனியாக பிரித்துள்ளது. இதற்காக இரண்டு குழுத் தலைவர்கள் மற்றும் கிளை வங்கிக்கான இரண்டு பிராந்தியத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது ஹெச்டிஎப்சி வங்கியின் ரீடைல் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் அரவிந்த் கபில் இனி அடமானக் கடன் வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய உள்ளார். இதில் ஹோம் லோன், சொத்துக்களுக்கு எதிரான கடன், HDFC-யின் விற்பனை பிரிவு ஆகியவற்றை நிர்வாகம் செய்ய உள்ளார்.
இதேபோல் அரவிந்த் வோஹ்ரா என்பவர் அடமானம் அல்லாத கடன் பிரிவை நிர்வாகம் செய்ய உள்ளார். இதில் பாதுகாப்பற்ற கடன், சிறு வர்த்தக கடன், வாகன கடன் ஆகியவை அடங்கும்.
ரமேஷ் லக்ஷ்மிநாராயணன் என்பவர் டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் சேவைகளை நிர்வாகம் செய்ய உள்ளார். ஹெச்டிஎப்சி வங்கி தனது சேவைகள் அனைத்தையும் டிஜிட்டல் வாயிலாக மக்களுக்கு அளிக்க உள்ள வேளையில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது.
ஆஷிஷ் பார்த்தசாரதி மிகவும் முக்கியமான ரீடைல் வங்கி கிளை வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய உள்ளார். இப்பிரிவின் கீழ் தான் டெபாசிட், ப்ராடெக்ட் டிஸ்ட்ரிபியூஷன் ஆகியவை உள்ளது. ஆஷிஷ் பார்த்தசாரதி கீழ் ஸ்மிதா பகத், சம்பத் குமார் ஆகியோர் உள்ளனர்.
மேலும் பராக் ராவ் ஏற்கனவே பேமெண்ட், கன்ஸ்யூமர் பைனான்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தை கவனித்து வந்த நிலையில் தற்போது இவருடைய போர்ட்போலியோ விரிவாக்கம் செய்யப்பட்டு, ப்ராடெக்ட் மேனேஜ்மென்ட், மார்கெட்டிங் ஆகியவற்றை கூடுதல் பொறுப்பாக கொண்டு நிர்வாகம் செய்ய உள்ளார்.
ராகேஷ் சிங் ஏற்கனவே முதலீட்டு வங்கியியல் மற்றும் ப்ரைவேட் பேங்கிங் ஆகியவற்றை நிர்வாகம் செய்து வந்த நிலையில், தற்போது ஆப்ஷோர் இண்டர்நேஷ்னல் வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய உள்ளார். மேலும் இந்த மாற்றங்கள் அனைத்தும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ஹெச்டிஎப்சி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications