இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஹெச்டிஎப்சி வங்கி உடன் நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்சிடிஎப்சி இணைக்கப்பட உள்ளது. இந்த இணைப்பின் மூலம் உலகின் பல வங்கிகளை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய வங்கி அமைப்பாக உருவெடுத்துள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் 4 ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி இணைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் இணைப்பிற்கான ஒப்புதல்கள் பெற தாமதம், நிர்வாக பணிகளின் தாமதம் காரணமாக 14- 15 மாதங்கள் ஆனது.

ஜூலை 1 முதல் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி ஒன்றாக இணைக்கப்படும் என்று, இதற்காக ஜூன் 30 ஆம் தேதி ஹெச்டிஎப்சி-யின் கடைசி நிர்வாக குழு கூட்டம் நடக்க உள்ளதாக HDFC சேர்மன் தீபக் பாரிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மேலும் ஜூலை 13 முதல் வர்த்தகங்கள் நிறுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி இணைக்கப்பட்ட நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் ஜூலை 17 ஆம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சந்தை மதிப்பீட்டு அளவில் பார்க்கும் போது உலகளவில் 416.5 பில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்காவின் ஜேபி மோர்கன் சேஸ் முதல் இடத்தில் உள்ளது. 228.3 பில்லியன் டாலர் உடன் சீனாவின் ICBC, 227.7 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் பேங்க் ஆப் அமெரிக்கா 3வது இடத்திலும், இணைக்கப்பட்ட பின்பு 171.8 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் 4வது இடத்தில் உள்ளது.
இதன் பின்பு சீன விவசாய வங்கி, சீன கட்டுமான வங்கி, HSBC, வெல்ஸ் பார்கோ, பேங்க் ஆப் சீனா, மோர்கன் ஸ்டான்லி ஆகியவை டாப் 10 இடங்களை உலகளவிலான அதிக சந்தை மதிப்பீடு கொண்ட வங்கிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி இணைப்பிற்கு பின்பு சுமார் 120 மில்லியன் வாடிக்கையாளர்கள் உடனும், 8300 வங்கி கிளைகள் உடனும், 177000 ஊழியர்கள் உடனும் வலிமை பெற உள்ளது ஹெச்டிஎப்சி வங்கி. 120 மில்லியன் வாடிக்கையாளர்கள் எனில் இது ஜெர்மனி நாட்டு மக்களை தொகையை காட்டிலும் அதிகமானது.


Click it and Unblock the Notifications