இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC மற்றும் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான HDFC Bank இணைப்பு குறித்து தேவையான ஒப்புதல்களை சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நிலையில் ஜூன் 30 ஆம் தேதி இரு நிறுவனங்களின் நிர்வாக குழுவும் வர்த்தக நேரத்திற்கு பின்பு சந்திக்க உள்ளது என HDFC சேர்மந் தீபக் பாரிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இணைப்பு நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹெச்டிஎப்சி பங்குகள் இன்று 2.3 சதவீதம் வரையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்துள்ளது. இது மே மாத துவக்கத்தில் இருந்து இது அதிகப்படியான அளவாகும். ஜூலை 13 முதல் வர்த்தகங்கள் நிறுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் ஜூலை 17 ஆம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜூன் 30 ஆம் தேதி தான் ஹெச்டிஎப்சி-யின் கடைசி நிர்வாக குழு கூட்டமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்பிஐ ஏப்ரல் மாதம் சில தளர்வுகளை அளித்து இணைப்பை எளிதாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்திய கார்பரேட் சந்தையில் மிகப்பெரிய இணைப்பாக பார்க்கப்படும் HDFC - HDFC Bank இணைப்பு கடந்த வருடம் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC-ஐ 40 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு இந்த இணைப்பு கையில் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த இணைப்பு மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நிதியியல் கூட்டமைப்பாக உருவெடுப்பது மட்டும் அல்லாமல் சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிடப்படுகிறது. இந்த இணைப்பை தொடர்ந்து ஒவ்வொரு 25 ஹெச்டிஎப்சி பங்குகளுக்கு 42 புதிய ஹெச்டிஎப்சி வங்க பங்குகள் வழங்கப்பட உள்ளது. சுமார் 740000 ஹெச்டிஎப்சி பங்குதாரர்கள் உள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications