இந்தியாவின் முன்னணி வீட்டுக் கடன் நிதி நிறுவனங்களில் ஒன்றான ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், கடந்த செப்டம்பர் 2018 காலாண்டில் ஈட்டிய 2,467 கோடி ரூபாய் நிகர லாபத்தை விட, 60.5 சதவிகிதம் கூடுதல் நிகர லாபத்தை இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் ஈட்டி இருக்கிறார்களாம். இந்த செப்டம்பர் 2019-ல் 3,961 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி இருக்கிறார்கள்.

க்ருஹ் ஃபைனான்ஸ் நிறுவன பங்குகளை விற்றதால் மட்டும் ஒரு கணிசமான லாபம் கிடைத்து இருக்கிறதாம். அதுவும் நிகர லாபம் அதிகரித்ததற்கு முக்கிய காரனம் என்கிறார்கள். வரி செலுத்துவதற்கு முன்பான லாபத் தொகை 1,627 கோடி ரூபாயாம்.
ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல்பாட்டில் இருந்து வந்த வருவாய் 10,478 கோடி ரூபயைத் தொட்டு இருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2018-ல் இந்த வருவாய் 9,494 கோடி ரூபாயாக இருந்ததாம்.
ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர வட்டி வரம்பு 3.3 சதவிகிதமாக இருக்கிறதாம். அதே போல இந்த காலாண்டில், கடன் வளர்ச்சி 12 சதவிகிதமாக இருக்கிறதாம்.
நிகர வட்டி வருமானம் கடந்த செப்டம்பர் 2018-ஐ விட 16.5 சதவிகிதம் அதிகரித்து 3,021 கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபனான்ஸ் கார்ப்பரேஷன் வாராக் கடன்களுக்காக 754 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த ஒதுக்கீடு கடந்த செப்டம்பர் 2018-ல் ஒதுக்கிய 890 கோடி ரூபாயை விட குறைவு என்பதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தோராய வாராக் கடன் (Gross NPA) இந்த செப்டம்பர் 2019-ல் 1.33 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிறுவனம் கொடுத்து இருக்கும் மொத்த கடன் தொகையில் 76 சதவிகிதம் தனி நபர்களுக்கு மட்டுமே கொடுத்து இருக்கிறார்களாம். அதோடு இனியும் தனி நபர் அல்லாதவர்களுக்கு தீர ஆலோசித்து பொறுமையாகத் தான் கடன் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications