எக்ஸிட் லைப் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றும் ஹெச்டிஎப்சி லைப்.. பங்குகள் தடாலடி உயர்வு..!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் இன்சூரன்ஸ் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி லைப் தனது வர்த்தகத்தையும், சந்தையில் தனது ஆதிக்கத்தை மேம்படுத்தவும் எக்ஸிட் லைப் நிறுவனத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் மிகமுக்கியமான வர்த்தகத் திட்டமாகப் பார்க்கப்படும் இத்திட்டம் சுமார் 6,687 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்பிடப்பட்டு உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி மீதான வர்த்தகக் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கிய பின்பு வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.

எக்ஸிட் இண்ட்ஸ்ட்ரீஸ் கிளை நிறுவனம்

எக்ஸிட் இண்ட்ஸ்ட்ரீஸ் கிளை நிறுவனம்

இந்திய ஆட்டோமொபைல் துறையில் பேட்டரி உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் எக்ஸிட் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் இந்த எக்ஸிட் லைப். எக்ஸிட் இண்ட்ஸ்ட்ரீஸ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்கத் திட்டமிட்டு வரும் நிலையில் இன்சூரன்ஸ் பிரிவு வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்வது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

எக்ஸிட் லைப் நிறுவனம்

எக்ஸிட் லைப் நிறுவனம்

எக்ஸிட் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் எக்ஸிட் லைப் நிறுவனத்தை மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ள காரணத்தால், இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகமாக ஒப்பந்தமாக மாறியுள்ளது. தற்போது வெளியான தரவுகள் அடிப்படையில் ஹெச்டிஎப்சி வங்கி சுமார் 6,687 கோடி ரூபாய்க்கு மொத்த எக்ஸிட் லைப் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

எக்ஸிட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்

எக்ஸிட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து எக்ஸிட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 14 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஆனால் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் சுமார் 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6,687 கோடி ரூபாய் டீல்

6,687 கோடி ரூபாய் டீல்

எக்ஸிட் லைப் மற்றும் ஹெச்டிஎப்சி லைப் டீல் குறித்து இரு நிறுவனங்களின் நிர்வாகத் தலைவர்களும் இன்று தத்தம் நிர்வாகக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த டீல் மூலம் ஹெச்டிஎப்சி வங்கி எக்ஸிட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள் அதாவது கிட்டதட்ட 87 மில்லியன் பங்குகளைத் தலா 726 ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 6,687 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற உள்ளது.

நிறுவனங்கள் இணைப்பு

நிறுவனங்கள் இணைப்பு

இரு நிறுவனங்களின் இணைப்பு பங்குகளைக் கைப்பற்றிய பின்பும் பணம் பட்டுவாடா செய்யப்பட்ட பின்பும் நடக்கும். இதற்கு முன்பு சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் முறையாக ஒப்புதல் பெற வேண்டும் அதன் பின்னரே இணைக்கப்படும்.

யாருக்கு லாபம்

யாருக்கு லாபம்

எக்ஸிட் லைப் நிறுவனம் தென் இந்தியாவில் அதிகளவிலான வர்த்தகத்தை வைத்துள்ளது, குறிப்பாக 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. இது ஹெச்டிஎப்சி வங்கிக்கு மிகப்பெரிய லாபமாகும். ஹெச்டிஎப்சி-க்கு இப்பிரிவில் வாடிக்கையாளர்கள் குறைவு என்பதால் எக்ஸிட் லைப் கைப்பற்றுவதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

பெங்களூர் நிறுவனம்

பெங்களூர் நிறுவனம்

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எக்ஸிட் லைப் நிறுவனம் மிகவும் லாபகரமான நிறுவனம். இந்நிறுவனத்தின் நிதியியல் அளவீடுகள் மிகவும் வலிமையானது, கடந்த 9 நிதியாண்டுகளாகத் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. மேலும் இந்நிறுவனத்தின் Solvency Ratio 200 சதவீதமாக உள்ளது.

எக்ஸிட் லைப் நிறுவனம்

எக்ஸிட் லைப் நிறுவனம்

எக்ஸிட் லைப் நிறுவனம் லாபகரமான லைப் இன்சூரன்ஸ் சேவை அளிப்பது மட்டும் அல்லாமல் வலிமையான ஏஜென்ட் நெர்வொர்க்-ஐ கொண்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் டிஜிட்டல் டிஸ்ட்ரிபியூஷன் வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது.

ஹெச்டிஎப்சி எர்கோ

ஹெச்டிஎப்சி எர்கோ

இதேவேளையில் ஹெச்டிஎப்சி லைப் சமீப காலமாக இன்சூரன்ஸ் சேவையில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது 2020ல் ஹெச்டிஎப்சி ஜெனர்ல் இன்சூரன்ஸ் சேவை பிரிவான் ஹெச்டிஎப்சி எர்கோ நிறுவனம் அப்போலோ முனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை 1,485 ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.

லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் (LIC)

லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் (LIC)

மத்திய அரசு லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் (LIC) நிறுவனத்தை ஐபிஓ மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ள நிலையில், ஹெச்டிஎப்சி லைப் இந்த எக்ஸிட் லைப் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தனியார் பிரிவில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+