ஹவுசிங் டெவலெப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (Housing Development Finance Corporation), சுருக்கமாக HDFC என்று அழைக்கப்படும் வீட்டுக் கடன் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன.
HDFC கம்பெனியின் ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் இன்று வெளியானது. இந்த ஜூன் 2020 காலாண்டில், ஜூன் 2019 காலாண்டில் ஈட்டிய லாபத்தை விட குறைவாகவே லாபம் ஈட்டி இருக்கிறது.
மற்ற வட்டி வருமானங்கள், நிகர வட்டி மார்ஜின் போன்ற விவரங்களை உள்ளே கட்டுரையில் பார்ப்போம்.
4.7% லாபம் சரிவு
இந்தியாவின் மிகப் பெரிய வீட்டுக் கடன் கம்பெனியான ஹெச் டி எஃப் சியின் நிகர லாபம் கடந்த ஜூன் 2019-ல் 3,203 கோடி ரூபாயாக இருந்ததாம். ஆனால் இந்த ஜூன் 2020 காலாண்டில் 3,052 கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. இது வெறும் 4.7 % சரிவு தான்.
நிகர வட்டி மார்ஜின்
இந்த ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையான முதல் காலாண்டில் ஹெச் டி எஃப் சி கம்பெனியின் நிகர வட்டி மார்ஜின் (Net Interest Margin - NIM) 3.1 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது. ஆனால் கடந்த ஜூன் 2019 காலாண்டில் 3.3 சதவிகிதமாக இருந்ததாம்.
இ எம் ஐ தவணை ஒத்திவைப்பு
ஹெச் டி எஃப் சி கம்பெனி தனி நபர்களுக்கு கொடுத்து இருக்கும் கடனில் 16.6 சதவிகித கடன்கள், இ எம் ஐ தவணை ஒத்திவைப்பு காலத்தில் இருக்கின்றனவாம். அதே போல இவர்கள் கம்பெனிகளுக்கு கொடுத்து இருக்கும் மொத்த கடனில் 22.4 % கடன்கள் கடன் தவணை ஒத்திவைப்பு காலத்தில் இருக்கின்றனவாம்.
பெரிய விஷயம் தான்
இப்படி வட்டி மார்ஜின் எல்லாம் குறையும் போது கூட, ஹெச் டி எஃப் சி கம்பெனியின் வருவாய் 0.2% அதிகரித்து இருக்கிறதாம். கடந்த ஜூன் 2019-ல் 12,990 கோடி ரூபாயாக இருந்த வருவாய், இந்த ஜூன் 2020 காலாண்டில் 13,017 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம்.
நிகர வட்டி வருமானம்
ஜூன் 2020 காலாண்டில் ஹெச் டி எஃப் சி கம்பெனியின் வட்டி வருமானம் 3,392 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஜூன் 2019 காலாண்டில் வெறும் 3,079 கோடி ரூபாய் தான் வட்டி வருமானம் ஈட்டி இருந்தார்களாம். கொரோனா வைரஸ் பிரச்சனை இருந்த காலத்திலும், 10 % வட்டி வருமானம் அதிகரித்து இருப்பது உண்மையாகவே பாராட்டுக்குரிய விஷயம் தான்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications