ரிசர்வ் வங்கி இன்றைய நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் கடந்த 3 வருடத்திற்கும் அதிகமாகக் குறைவான வட்டி விகிதத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கும் மக்களுக்கு இந்த வட்டி விகித உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது.
இரு மாத நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று தனியார் வங்கி பிரிவில் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் HDFC, ICICI கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
ஹெச்டிஎப்சி நிறுவனம்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்திய சில மணிநேரங்களிலேயே, வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி அதன் கடன் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இதன் மூலம் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் வீட்டுக் கடன்களுக்கான ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும்.
7 முறை வட்டி விகிதம்
ஆர்பிஐ கடந்த 5 மாதத்தில் நாட்டின் பணவீக்கத்தையும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த 4 முறை வட்டி விகிதங்கள் உயர்த்திய நிலையில் ஹெச்டிஎப்சி இதே 5 மாதத்தில் 7 முறை தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இதேவேளையில் ஐசிஐசிஐ வங்கி 2 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் அனைத்து வைப்பு நிதிகளுக்கும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இப்புதிய வட்டி விகிதம் செப்டம்பர் 30 முதல் அமலாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
3- 6.10 சதவீத வட்டி
இதன் மூலம் ஐசிஐசிஐ வங்கி வைப்பு நிதிக்கு வட்டி விகித உயர்த்திய முதல் வங்கியாக உள்ளது. இப்புதிய வட்டி உயர்வு மூலம் 7 முதல் 10 வருட வைப்பு நிதிக்கு 3- 6.10 சதவீதம் வரையிலான வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.
ஆர்பிஐ
ஆர்பிஐ இன்றைய கூட்டத்தின் முடிவில் அறிவித்த 50 அடிப்படை புள்ளிகள் உயர்வு மூலம் ரெப்போ விகிதம் 1.9 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் டிசம்பர் மாதமும் 25- 35 சதவீத அடிப்படை புள்ளிகள் அளவிலான வட்டி விகிதம் அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications