லாபத்தில் 28% சரிவு தான்.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்கிய பங்கு விலை..!

தனியார் துறையை சேர்ந்த கடன் வழங்குனரான ஹெச்டிஎஃப்சி ( HDFC) தனது செப்டம்பர் மாத காலாண்டு முடிவினை இன்று வெளியிட்டுள்ளது.

அதன் படி கிட்டதட்ட 28% அதன் நிகரலாபம் குறைந்து, 2,870.1 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 3,961.5 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.

வீட்டுக்கடன் வழங்குனரான இந்த நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 15% அதிகரித்து, 4,059 கோடி ரூபாயாக இருந்தது.

லாபத்தில் 28% சரிவு தான்.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்கிய பங்கு விலை..!

இதே இந்த தனியார் நிறுவனத்தின் மொத்த வருவாய் 11,727.96 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 13,487.44 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நிகர வட்டி வருவாய் 3,647 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3,021 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 21% வளர்ச்சி கண்டுள்ளது.

மொத்தம் செயல்படாத கடன்களின் மதிப்பு 8,631 கோடி ரூபாயாக ஜூன் 30வுடன் முடிவடைந்த காலாண்டில் இருந்தது. இது கடன் போர்ட்போலியோவில் 1.87%க்கு சமமாகும். இதே புரவீசன்ஸ் ஜூன் காலாண்டில் 12,285 கோடி ரூபாயாகவும் இருந்தது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 6% மேல் அதிகரித்து, 2,042 ரூபாயாக காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.

இந்த நிறுவனத்தின் லாபம் தான் சரிந்துள்ளது எனில், ஹெச்டிஎஃப்சி வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், அதன் நிகரலாபம் 18.4% குறைந்து, 7,513 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக அறிவித்திருந்தது. இது கடந்த ஆண்டில் 6,345 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது நிகர வட்டி வருவாய், அதாவது சம்பாதித்த வட்டி விகிதம் மற்றும் செலவிடப்பட்ட வட்டி விகிதத்திற்கு இடையிலான வேறுபாடு, செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 16.7% அதிகரித்து, 15,776.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் சொத்து வளர்ச்சி 21.5% அதிகரித்துள்ளது. அதோடு நிகர வட்டி மார்ஜின் தொகையானது 4.1% அதிகரித்துள்ளதாக பிஎஸ்இ-க்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இவ்வங்கி தெரிவித்திருந்தது.

அதோடு தொடர்ச்சியாக டெபாசிட்டுகளில் கவனம் செலுத்தப்பட்டு வந்ததால், இது பணப்புழக்கத்திற்கு ஏதுவாக அமைந்ததாகவும் இவ்வங்கி தெரிவித்திருந்தது. இது கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 20.30% அதிகரித்து, 12,29,310 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் இவ்வங்கியின் பணப்புழக்க விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே இந்த வங்கியில் வாராக்கடன் விகிதமானது 1.38% ஆக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டது கவனிக்கதக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+