ஹோம் லோன் வாங்கியவர்களுக்குச் செக்.. HDFC முக்கிய அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப் லிமிடெட் (HDFC)டிசம்பர் 20 முதல் அதன் ரிடைல் ப்ரைம் லென்டிங் ரேட் (RPLR) அளவை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) இதன் இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி ரெப்போ விகிதத்தை 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இதன் தொடர்ந்து இதை நாட்டின் வீட்டுக் கடன் சேவை நிறுவனமான HDFC தனது வீட்டுக் கடனை அதிகரித்துள்ளது.

மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு.. என்ன பேசினார் தெரியுமா..?! மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு.. என்ன பேசினார் தெரியுமா..?!

HDFC அறிவிப்பு

HDFC அறிவிப்பு

ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப் லிமிடெட் (HDFC) அறிவிப்பு மூலம் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் இந்த வட்டி விகித உயர்வு பொருந்தும். இந்த வட்டி உயர்வுக்குப் பின் 800 மற்றும் அதற்கு அதிமாகக் கிரெடிட் ஸ்கோர் கொண்ட ஒருவர் HDFC -யிலிருந்து புதிய வீட்டுக் கடன் வாங்கினால் அவருக்கு 8.65 சதவீதம் வட்டி விகிதம்.

ஈஎம்ஐ

ஈஎம்ஐ

உங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து டெபிட் செய்யப்படும் மாதாந்திர EMIகளும் அதிகரிக்கும். இதுவரையில் பெரும்பாலான வங்கிகள் ஆர்பிஐ வட்டி விகித உயர்வு கடன் காலத்தை அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஈஎம்ஐ தொகையை அதிகரிக்க உள்ளது.

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர்

800 கீழ் கிரெடிட் ஸ்கோர் கொண்டு கடன் வாங்குபவர்கள், அவர்களின் கிரெடிட் ஸ்கோர், நிதி நிலைமை மற்றும் அவர்கள் சம்பளம் வாங்குபவர்களா அல்லது சுயதொழில் செய்பவரா என்பதைப் பொறுத்து 8.95 சதவீதம் முதல் 9.30 சதவீதம் வரையில் வட்டி நிர்ணயம் செய்யப்படும்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி தனது பெஞ்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 225 அடிப்படை புள்ளிகள் உயர்ந்துள்ளன. இதை அப்படியே வங்கிகள் மற்றும் HDFC போன்ற வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் தலையில் விதித்துள்ளது.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ

எஸ்பிஐ, ஐசிஐசிஐ

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய இரண்டு பெரிய கடன் சேவை அளிக்கும் வங்கிகளும் டிசம்பர் 7 ஆம் தேதி ஆர்பிஐ உயர்வுக்குப் பிறகு வீட்டுக் கடன் விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் அதிகரித்துள்ளன.

SBI புதிய வீட்டுக் கடன்

SBI புதிய வீட்டுக் கடன்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா புதிய வீட்டுக் கடன்களை ஜனவரி 31 2023 வரையில் நடைமுறையில் இருக்கும் தனது பண்டிகை கால ஆபரில் 750 மற்றும் அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோருக்கு 8.75% வட்டி விகிதத்தில் வழங்குகிறது. இது அதன் தற்போதைய விகிதமான 8.90 சதவீதத்தை விடவும் 15 அடிப்படை புள்ளிகள் குறைவு.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

இதேபோல் ஐசிஐசிஐ வங்கி 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களுக்கு 8.75 சதவீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது, இது டிசம்பர் 31 2022 வரை செல்லுபடியாகும். ஆனால் இது அதன் வழக்கமான விகிதம் மான 8.95 சதவீதமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC shocks its customers by hikes of home loan rates upto 9.30 percent; After SBI, ICICI

HDFC shocks its customers by hikes of home loan rates upto 9.30 percent; After SBI, ICICI
Story first published: Tuesday, December 20, 2022, 7:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X