மும்பை: டெல்லி உள்ளிட்ட வட மாநில நகரங்களில் காற்று மாசு பெருமளவுக்கு அதிகரித்துள்ள சூழ்நிலையில், இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகையை உயர்த்துவது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது பேச்சு வழக்கு. அதுபோலத்தான், இந்த விஷயமும் பார்க்கப்படுகிறது. காப்பீட்டு நிறுவனங்கள் என்பவை மக்களுக்கு சேவை செய்வதை முதல் நோக்கமாக கொண்டவை கிடையாது.
சேவைத்துறை என்றபோதிலும், அவர்களின் முதன்மை நோக்கம் லாபம் ஈட்டுவதுதான். இப்போது அந்த லாபத்துக்கே ஆபத்து என்ற நிலை உருவாகிவிட்டது என்று கருதுகின்றன காப்பீட்டு நிறுவனங்கள்.
நுரையீரல் பிரச்சினை
இதற்கு காரணம் டெல்லி உள்ளிட்ட வட மாநில நகரங்களில் அதிகரித்து உள்ள காற்று மாசுதான். வெறும் டெல்லி மட்டுமே கிடையாது. காற்று மாசு பாதிப்பு என்பது பிற நகரங்களுக்கும் பரவியபடி உள்ளது. இதனால் நுரையீரல் பிரச்சனை, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள நோயாளிகளை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது.
அறுவை சிகிச்சை
தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்ற போதிலும் கூட, இதே போன்ற காற்று மாசுபாடு நீடித்தால் அடுத்த சில வருடங்களில் மருத்துவமனைகளில் தங்கி கொண்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் கணிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நுரையீரல் சார்ந்த அறுவை சிகிச்சைகள் செய்யக்கூடிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவை கருதுகின்றன. காப்பீடு வைத்துள்ளார் அதை வைத்து இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
மருத்துவமனைகளுக்கு அதிக பணம்
மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் அதிக பணத்தை வழங்கினால் அது லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பிரீமியம் தொகையை உயர்த்தி விட காப்பீட்டு நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பாஜாஜ் அல்லியன்ஸ் ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிக பிரிவு தலைவர் குர்தீப் சிங், இதுபற்றி கூறுகையில், "இந்த முறை காற்று மாசு என்பது சில காலம் நீடித்து இருப்பது புரிகிறது. அதேநேரத்தில் ஒரு மாதத்திற்குள்ளாக இந்த நிலைமை சரியாகிவிடும் என்று தோன்றுகிறது. எனவே இதற்காக பிரீமியம் தொகையை உயர்த்த வேண்டியது, இப்போதைக்கு அவசியமில்லை என்று நாங்கள் கருதுகிறோம்" என்று கூறியுள்ளார்.
காத்திருக்க வேண்டும்
இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகைகைகளை உயர்த்துவது என்பது உடனடியாக செய்யப்படக்கூடிய பணி கிடையாது. இதற்காக அந்த நிறுவனங்கள் காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பின் அனுமதியை பெறவேண்டும். இதற்கு விண்ணப்பித்த பிறகு சுமார் 6 முதல் 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். எனவே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நினைத்தாலும் கூட உடனடியாக பிரீமியம் தொகை உயர்வு என்பது உடனடியாக, அமலுக்கு வராது என்பது வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி.
நிலைமை மாறுமா?
ஒருவேளை காற்று மாசு என்பது குறைந்து விட்டால் அதற்கான அவசியமும் எழாது. ஆனால் இப்படியே நிலைமை நீடித்தால் கண்டிப்பாக அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரீமியம் தொகையை உயர்த்தும் வேலைகளில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இறங்கி விடும் என்கின்றனர் காப்பீட்டுத் துறை வட்டாரங்கள்
காப்பீட்டு நிறுவனங்கள், வெவ்வேறு மண்டலங்களுக்கான வெவ்வேறு பிரீமியங்கள் நடைமுறையை வைத்துள்ளன. டயர் I, டயர் II மற்றும் III நகரங்களாக அவை வகைப்படுத்தி ப்ரீமியம் வசூலிக்கின்றன.
இன்சூரன்ஸ் வகைகள்
உதாரணத்திற்கு நீங்கள் டெல்லியில் வசிக்கும், 40 வயது கொண்ட ஒரு நபர் என வைத்துக்கொள்வோம். (இது டயர் I இன் கீழ் வரும்), உங்கள் பிரீமியம் 10 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்சுக்கு, சுமார், 12,540 ஆக இருக்கும், ஆனால் நீங்கள் டேராடூனில் (டயர் II) வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் பிரீமியம் ரூ.10,450 என்ற அளவில் இருக்கும். செக்யூரனோ.இன் முதன்மை அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான அபிஷேக் போண்டியா கூறுகையில், "காற்று மாசுபாடு குறித்து இன்னும் தீவிர ஆலோசனையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடங்கவில்லை. நிச்சயமாக, மருத்துவமனையில் நோயாளிகள் சேர்க்கப்படுவது அதிகரித்துள்ளது, ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து பணம் கோருவது அதிகம் இல்லை" என்றார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications