அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட ஹிமாச்சல பிரதேச மக்கள்.. ரூ.200 கோடி கிரிப்டோ மோசடி..!!

இந்திய மக்கள் மத்தியில் கிரிப்டோ காய்ச்சல் உச்சக்கட்டத்தை எட்டிய 2018 ஆம் ஆண்டு முதல் இமாச்சலப் பிரதேசம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களிடம் 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கிரிப்டோகரன்சி மோசடி மன்னனை போலீஸார் கைது செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கிரிப்டோ முதலீடுகளில் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருவதாகக் கூறி மக்களைக் கவர்ந்த இந்த மோசடி கும்பல், முதலில் பெரும் முதலீட்டாளர்களின் நெட்வொர்க்-ஐ உருவாக்கியது. இத்திட்டத்தில் இணைந்த ஆரம்பக்கட்ட முதலீட்டாளர்கள் பின்னர் நெருக்கடி காரணமாக மற்றவர்களை ஈர்க்க கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். இது முழுக்க முழுக்க ஒரு போலி முதலீட்டு திட்டமாகவே இயங்கி வந்துள்ளது.

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட ஹிமாச்சல பிரதேச மக்கள்.. ரூ.200 கோடி கிரிப்டோ மோசடி..!!

இந்த விவகாரத்தை விதான் சபா-வில் சுயேச்சை எம்எல்ஏ-வான ஹோஷ்யர் சிங் எழுப்பினார், அவர் பேசுகையில் காங்ரா மற்றும் ஹமிர்பூரில் உள்ள மக்களிடம் இருந்து மட்டும் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் பணம் மோசடி செய்ததாக கூறினார். இதை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

வடக்கு ரேஞ்ச் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், எஸ்ஐடியின் தலைவரான அபிஷேக் துல்லர் திங்களன்று PTI பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கையில் மோசடி செய்யப்பட்ட சரியான தொகை இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார். இந்த மோசடி கும்பல் முதலில் அறிமுகப்படுத்திய நாணயம் 'Korvio Coin' அல்லது KRO நாணயங்கள் ஆகும்.

மோசடி செய்தவர்கள் தவறான தகவல், ஏமாற்றுதல் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மூலம் தங்கள் திட்டத்தின் மீதான கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்ட, மோசடி செய்யப்பட்டும் விஷயம் வெளியில் வராமல் பல வருடங்களாக இயங்கி வந்தது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் நாணயத்தின் மதிப்பை போலியாக காட்டி முதலீட்டாளர்களிடமிருந்து அதிக பணத்தை பெற்றுள்ளனர்.

மேலும் முதலீட்டாளர்களிடம் ஆக்டிவேஷன் கட்டணத்தை வசூலித்தது மற்றும் அவர்களுக்கு கணிசமான வருமானத்தை தொடர்ந்து உறுதியளித்தனர், இதன் மூலம் பல புதிய முதலீட்டாளர்கள் ஏமாந்தனர். அவர்களின் ஐந்தாண்டு மோசடியில், மூன்று முதல் நான்கு கிரிப்டோகரன்சிகளை அறிமுகம் செய்துள்ளனர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு அவர்களின் முதலீட்டு வாயிலாக அல்லாமல் புதிதாக சேர்க்கப்படும் முதலீட்டாளர்கள், அவர்கள் செய்யும் முதலீடு அடிப்படையில் கூடுதல் லாபம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த முதலீட்டை கவர்ச்சிகரமானதாக்க கிரிப்டோகரன்சியின் விலையை அவ்வப்போது ஏற்றி இறக்கி தொடர்ந்து முதலீட்டாளர் வலை அமைப்பை உயிர்ப்புடன் வைத்திருந்துள்ளனர் இந்த மோசடி கும்பல்.

மோசடி செய்பவர்கள் தங்கள் நாணயங்களை பட்டியலிட போலி வலைத்தளங்களை உருவாக்கி அவற்றின் விலைகளை கையாண்டனர். பின்னர் அவர்கள் 'டிஜிடி காயின்' என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தினர். போதுமான மக்கள் இந்த நாணயங்களை அதிக விலையில் வாங்கிய பிறகு, அதன் விலை வேண்டுமென்றே குறைக்கப்பட்டது, இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட ஹிமாச்சல பிரதேச மக்கள்.. ரூ.200 கோடி கிரிப்டோ மோசடி..!!

குற்றம் சாட்டப்பட்டவர்கள் புதிய நாணயங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை 'ஹைபெனெக்ஸ்ட்' மற்றும் 'அக்லோபல்' போன்ற பல்வேறு நிறுவனப் பெயர்களில் அறிமுகப்படுத்தினர். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்படும்போது, ​​​​அது மற்றொரு முதலீட்டு வாய்ப்பாக மார்கெட்டிங் செய்யப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுக்குறித்து 50க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளது, மேலும் 5 பேர் சிறைப்படிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த மாபெரும் மோசடியை இயக்கிய பெரும் தலையை இதுவரையில் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+