இந்த 5 பங்குகளில் முதலீடு செய்தால் 12 மாதங்களில் 36% லாபம் கிடைக்கும் தெரியுமா?

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் எந்த பங்குகளில் முதலீடு செய்தால் லாபம் ஈட்ட முடியும் என முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் ஷேர்கான் நிறுவனம் 5 நிறுவனங்களின் பங்குகளை பரிந்துரைத்துள்ளது.

திங்கட்கிழமை மார்ச் 25ஆம் தேதி வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு என்னென்ன பங்குகளை வாங்கலாம் என்பது குறித்து ஷேர் கான் தரகு நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.

இந்த 5 பங்குகளில் முதலீடு செய்தால் 12 மாதங்களில் 36% லாபம் கிடைக்கும் தெரியுமா?

உள்நாட்டு சூழல் மற்றும் அமெரிக்க வங்கி வட்டி விகிதம் ஆகியவை காரணமாக இந்திய பங்குச்சந்தை ஏறி இறங்குகிறது.

இந்நிலையில் அடுத்த 12 மாதங்களுக்கு முதலீடு செய்யும் வகையிலான பங்குகளை தரகு நிறுவனமான ஷேர்கான் அடிப்படை காரணிகளை ஆராய்ந்து பரிந்துரை செய்துள்ளது.

டால்மியா பாரத், சைடஸ் லைஃப் சயின்ஸ், கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் மற்றும் அசோக் லேலண்ட் ஆகிய ஐந்து நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் அடுத்த ஓராண்டு காலத்தில் 36 சதவிகிதத்திற்கும் மேல் லாபம் ஈட்ட முடியும் என ஷேர்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டால்மியா பாரத் : இந்த பங்குகள் தற்போது சீரமைக்கப்பட்டு இருப்பதால் நல்ல லாபம் தரும் என தெரிகிறது. தற்போது ஒரு பங்கு 1,922 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது, இது 12 மாதங்களில் இதன் மதிப்பு 2,600 ரூபாய் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

சைடஸ் லைஃப் சயின்ஸ்: மருந்து நிறுவனமான சைடஸ் லைஃப் சயின்ஸின் பங்கு தற்போது 991 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இது அடுத்த 12 மாதங்களில் 1100 ரூபாய் வரை உயரும் என்று ஷேர்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது .

கோல் இந்தியா: அரசு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கி வைக்கலாம் என ஷாருக்கான் நிறுவனம் மதிப்பீடு தந்துள்ளது. தற்போது இந்த பங்கு 431 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகும் நிலையில் 550 ரூபாய் வரை இதன் மதிப்பு உயரும் என கணித்துள்ளது.12 மாதங்களில் 27 சதவிகிதம் வரை இந்த பங்கின் மதிப்பு உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட்: அடுத்ததாக ஷேர்கான் நிறுவனம் ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. தற்போது 2,242 ரூபாய்க்கு வர்த்தகமாகும் நிலையில் அடுத்த 12 மாதங்களில் இது 2,910 ரூபாய் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அசோக் லேலாண்ட்: அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் பங்கு தற்போது 166 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இந்த பங்கு அடுத்த 12 மாதங்களில் 221 ரூபாய் என 33 சதவீதம் உயர்வு காணும் என ஷேர்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+