முந்தைய தலைமுறைக்கு சொந்த வீடு என்பது வாழ்நாள் கனவாக இருந்த நிலையில், தற்போது எளிய மற்றும் வேகமாக வீட்டுக் கடன் வசதிகள் மூலம் சொந்த வீடு என்பது எளிதாக எட்டக்கூடிய ஒன்றாக மாறியுள்ளார். இதேபோல் இன்றைய தலைமுறைக்கு சொந்து வீடு வாங்குவதும், கட்டுவதும் எளிதானதாக இருந்தாலும் அடுத்த 20 முதல் 30 வருடம் ஈஎம்ஐ செலுத்த வேண்டும் என்பது பெரும் சுமை, பலருக்கு சவால், சிலருக்கு இந்த சவாலில் தோற்றும் போகின்றனர்.
இந்த நிலையில் ஹோம் லோன்-க்கான ஈஎம்ஐ ஏற்கனவே கடந்த மே மாதம் முதல் பெரிய அளவில் அதிகரித்துள்ள வேளையில் தற்போது பல வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் முதல் பல லட்சம் ஹோம் லோன் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கடனுக்கு அதிகப்படியான ஈஎம்ஐ தொகையை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி உடன் பொதுத்துறை வங்கிகளான பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் பேங்க் ஆப் இந்தியா ஆகிய அனைத்து கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றும் வகையில் MCLR விகிதத்தை அதிகரித்துள்ளது. இப்புதிய வட்டி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
MCLR விகிதம் என்பது வங்கிகளின் அளிக்கப்படும் பல்வேறு கடன்களின் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் ஒரு அளவீடு. இதை அடிப்படையாக வைத்து தான் ஒவ்வொரு கடன் வகைகளும் இருக்கும் இதன் லாப அளவீடுகளை வைத்து வட்டி விதித்து ஒருவரின் கிரெடிட் ஸ்கோரை வைத்து கடனுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும்.
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு படி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கான் MCLR விகிதம் 8.90 சதவீதம், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 8.60 சதவீதம், பேங்க் ஆஃப் இந்தியாவில் 8.70 சதவீதம் வரையில் உயர்த்தப்படும்.

ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளின் MCLR விகித உயர்வு புதிதாக கடன் வாங்குபவர்கள் மட்டும் அல்லாமல் ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கும் பாதிக்கும். மேலும் இது வீட்டு கடன், வாகன கடன், பர்சனல் லோன் என அனைத்து தரப்பினரையும் பாதிப்பும்.
இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் நடத்திய நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கப்படாத காரணத்தால் தொடர்ந்து 6.5 சதவீதமாக அறிவித்துள்ளது. ஆர்பிஐ மே 2022 முதல் தனது ரெப்போ விகிதத்தை 2.5 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது, இதன் விளைவாக மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ பெரிய அளவில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications