திங்கள்கிழமை சர்வதேச சந்தையின் வர்த்தக முடிவில் இந்திய பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு 4.33 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட்டது மூலம் உலகிலேயே அதிக மதிப்புடைய சந்தைகளில் 4வது இடத்தை எட்டியுள்ளது இந்தியா. இதேவேளையில் ஹாங்காங் பங்குச்சந்தை மதிப்பு 4.29 டிரில்லியன் டாலராகக் குறைந்து இந்தியாவிடம் தனது இடத்தை இழந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 3,75,97,315.42 கோடி ரூபாயாக உள்ளது, அதாவது 4.51 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை வீட ஹாங்காங் பங்குச்சந்தை வீழ்ச்சி மிகவும் முக்கியமானது, ஏன் இந்த வீழ்ச்சி என்பதைக் கட்டாயம் அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

இன்ஜின்: உலகப் பொருளாதாரத்தின் இன்ஜினாக விளங்கும் சீனா சமீப காலமாகத் தனது ஆதிக்கத்தை இந்தியாவிடமும், பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளிடமும் இழந்து வருகிறது. குறிப்பாகச் சீனாவை விட்டு பல நிறுவனங்கள் வெளியேறத் துவங்கியுள்ளதும் இன்றைய பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியமான காரணம்.
ஹாங்காங் பங்குச்சந்தை ஏன் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியம்..? ஹாங்காங் பங்குச்சந்தைக்கு, சீன பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு..? ஹாங்காங் பங்குச்சந்தை வீழ்ச்சி சீனா பொருளாதார வீழ்ச்சியைக் காட்டுகிறதா..?
சர்வதேச சந்தை நுழைவு வாயில்: சீனாவின் முதலீட்டுச் சந்தை, நிதி திரட்டல், வெளிநாட்டு முதலீடு, சர்வதேச வர்த்தகம் ஆகிய அனைத்திற்கும் முகவரியாக விளங்குகிறது ஹாங்காங். உதாரணமாக ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் சீனா பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமெனில் சாதாரண விஷயமில்லை. பல கட்ட ஒப்புதல், அனுமதி, மொழி புலமை ஆகியவற்றைக் கடந்து சர்வதேச அளவில் அங்கிகாரம், குறிப்பிட்ட அளவிலான நிதி ஆதாரத்தைக் காட்டுதல் எனப் பல 100 பக்கம் கண்டிஷன்கள்.
ஈடிஎப் முதலீடு: இதேபோல் சீனா பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முக்கியக் கருவியாக ETF விளங்குகிறது, ஆனால் இதில் ரீடைல் முதலீட்டாளர்கள் நேரடியாகப் பங்குகளைப் பெற முடியாது. அமெரிக்காவில் பல சீன ETF-கள் பட்டியலிடப்பட்டு உள்ளது. உதாரணமாக iShares China Large-Cap ETF, KraneShares CSI China Internet ETF, SPDR S&P China ETF.
Hong Kong IPO: ஆனால் சீன அரசின் நேரடி முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங் பங்குச்சந்தையில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை, இதனால் சீனாவில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் dual listing முறையில் சீனாவிலும், ஹாங்காங்-லும் பட்டியலிடும். இதன் மூலம் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து எளிதாக முதலீடு (நிதி திரட்டல்) பெற முடியும், இதேபோல் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் எளிதாகச் சீன நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியும்.
வெளிநாட்டு முதலீடு: சீன சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் கேட்வே (Gateway) ஆக அமைந்தது ஹாங்காங். இதனால் சீனா பொருளாதார வளர்ச்சியை ஹாங்காங் நேரடியாகப் பிரதிபலிக்கும். இப்படியிருக்கும் சூழ்நிலையில் சீனாவில் கொரோனா கட்டுப்பாடு, ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள், ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி, மேற்கத்திய நாடுகள் உடனான பிரச்சனை ஆகியவை சீனாவின் பொருளாதார வளர்ச்சியை மந்த நிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்தியா Vs ஹாங்காங்: இதனால் சர்வதேச வளர்ச்சி இன்ஜின் என்ற பெயரை சீனா இழந்தது மட்டும் சீன பொருளாதாரம் கடந்த சில காலாண்டுகளாக மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக 2021 உச்சத்தில் இருந்து சீனா - ஹாங்காங் பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு சுமார் 6 டிரில்லியன் டாலர் சரிந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையின் மொத்த மதிப்பே 4.5 டிரில்லியன் டாலர், அங்கே இழந்தது மட்டும் 6 டிரில்லியன் டாலர்.
ஐபிஓ: இதேபோல் ஹாங்காங் பங்குச்சந்தையில் புதிய ஐபிஓ-க்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது, ஒரு காலத்தில் தினமும் ஐபிஓ வெளியிட்டு பிசியான ஐபிஓ முதலீட்டுச் சந்தையாக இருந்த ஹாங்காங் பங்குச்சந்தை இப்போது காற்று வாங்கி வருகிறது.
முதலீடு வெளியேற்றம்: இதனால் சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீன பொருளாதாரத்தின் மந்த நிலை, தொடர் சரிவு ஆகியவற்றைக் காரணம் காட்டில் அதிகளவில் தங்களது முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.
சந்தை கணிப்பு: ஆனால் UBS Group AG கூறுகையில் 2024ல் இந்திய பங்குகளை விடச் சீன பங்குகள் அதிக லாபத்தைக் கொடுக்கும் எனக் கணித்துள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் கலவையான கருத்து நிலவுகிறது. மேலும் 2024ல் உலகில் பெரும்பாலான நாடுகளில் தேர்தல் நடக்கும் காரணத்தால் நிலைமை மாறவும் வாய்ப்பு உள்ளது.
இந்திய சந்தை முதலீடு: 2023ல் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 21 பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் மொத்த ஜிடிபி-யில், ஹாங்காங் பங்கீடு வெறும் 2 சதவீதம் தான், ஆனால் சர்வதேச முதலீடு மற்றும் நிதி ஆதாரத்திற்கு நுழைவு வாயில். இதனாலேயே சீனாவில் நிதி சேவை கட்டமைப்பு மிகவும் வலிமையாகவும், மேம்பட்டதாகவும் உள்ளது.
டாப் 5 இடம்: Hang Seng குறியீடு 5 நாளில் 2.31 சதவீதமும், 6 மாதத்தில் 17.51 சதவீதமும் சரிந்துள்ளது. தற்போது உலகிலேயே அதிக மதிப்புடைய பங்குச்சந்தையாக அமெரிக்கா கிட்டதட்ட 50 டிரில்லியன் டாலர் உடன் முதல் இடத்திலும், 2வது இடத்தில் சீனா 10.6 டிரில்லியன் டாலர் மதிப்பிலும், 3வது இடத்தில் ஜப்பான், 4வது இடத்தில் இந்தியா, 5வது இடத்தில் ஹாங்காங் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications