தங்கும் விடுதிகள் (Hostel) மற்றும் Paying Guest (PG) விடுதிகளில் தங்குவோர் செலுத்தும் வாடகைக்கு 12 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும் என்று கர்நாடகாவில் உள்ள அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம் (ஏஏஆர்) தெரிவித்துள்ளது. இதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளதால், இனி பெரு நகரங்களில் ஹாஸ்டல் மற்றும் PG-களில் வாடகைக்கு இருப்போர் ஒவ்வொரு மாதமும் வாடகை செலுத்தும் போது உஷாராக இதை செய்ய வேண்டும்.
அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையத்தில் பதிவிட்ட இரண்டு தனித்தனி வழக்கு உத்தரவுகளில், ஜிஎஸ்டி-ஏஏஆர் மக்கள் செலுத்தும் விடுதி வாடகை, Residential Dwelling அல்ல என்பதால் இதற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு பெற தகுதியற்றது என்று கூறியுள்ளது.

ஜிஎஸ்டி அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம் கர்நாடகாவை தளமாகக் கொண்ட ஸ்ரீசாய் சொகுசு தங்கும் நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் ஹாஸ்டல் மற்றும் PG-களை உருவாக்கி நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம் தொடுத்த வழக்கை விசாரித்த போது, ஹாஸ்டல் மற்றும் PG-களில் வாடகைக்கு இருப்போர் ஒவ்வொரு மாதமும் வாடகை அளிப்பது Residential Dwelling போன்றது தான், இதனால் இதற்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு வேண்டும் என வாதாடியது.
இதற்கு ஜிஎஸ்டி அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம், Residential Dwelling போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு உண்டு, இதேபோல் ஹோட்டல், Inns அல்லது பேயிங் கெஸ்ட் போன்ற கட்டமைப்புக்கு ஒரு நாளுக்கு 1000 ரூபாய் குறைவான வாடகை கொண்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
ஜூலை 2022ல் அரசு ஒரு நாளுக்கு 1000 ரூபாய் குறைவான வாடகை கொண்ட ஹோட்டல் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் போன்ற கட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு திரும்ப பெறப்பட்டது. இந்து புதிய வரி ஜூலை 18 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த வரி விலக்கு சலுகை ஜூலை 17, 2022 வரையில் மட்டுமே இருந்து என ஜிஎஸ்டி அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம் விளக்கம் கொடுத்தது.
இதன் மூலம் தற்போது தங்கும் விடுதிகள் (Hostel) மற்றும் Paying Guest (PG) விடுதிகளில் தங்குவோர் செலுத்தும் வாடகைக்கு 12 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும். இதன் மூலம் ஹாஸ்டல் மற்றும் பிஜி கட்டமைப்பில் தங்குவோரின் செலவுகள் அதிகரிக்கும், 10000 ரூபாய் மட்டும் கொடுக்க வேண்டிய இடத்தில் இனி 11200 ரூபாய் செலுத்த வேண்டும்.
Residential Dwelling என்பது நிரந்தரமாக குடியிருக்கும் வீடுகள், இதற்கு எவ்விதமான ஜிஎஸ்டி-யும் வசூலிப்பது இல்லை முழு ஜிஎஸ்டி வரி விலக்கு உண்டு. மேலும் ஜிஎஸ்டி அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம் ஒரு அறையை பலர் பகிர்ந்துக்கொண்டு தனிப்பட்ட சமையல் அறை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் இது வாடகை விட்டின் கீழ் வராது, இதற்கு ஜிஎஸ்டி வரி பொருந்தும் என முழுமையான விளக்கம் கொடுத்துள்ளது.
இதேபோல் விடுதிகள் (Hostel) மற்றும் Paying Guest (PG) விடுதிகளில் அளிக்கப்படும் வாஷிங் மெஷின் மற்றும் டிவி ஆகியவற்றை வாடகையுடன் சேர்க்கப்பட்ட சேவையாக அளிக்க கூடாது. தனிப்பட்ட முறையில் இதற்கு வரி விதிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications