தங்கும் விடுதிகள் (Hostel) மற்றும் Paying Guest (PG) விடுதிகளில் தங்குவோர் செலுத்தும் வாடகைக்கு 12 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும் என்று கர்நாடகாவில் உள்ள ஜிஎஸ்டி அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம் (ஏஏஆர்) தெரிவித்துள்ளது. இதன் மூலம் விடுதிகளில் தங்குவோர் செலுத்தும் வாடகைக்கு 12 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும்.
மக்களின் சம்பாத்தியத்தில் பெரும் பகுதி ஜிஎஸ்டி வரி மூலம் அரசுக்கு செலுத்தப்படுவது பெரும் சுமையாக பார்க்கப்படும் வேளையில் தங்கும் விடுதிகள் (Hostel) மற்றும் Paying Guest (PG) விடுதிகளில் அதிகளவில் தங்கும் மாணவர்கள், பிரஷ்ஷர்கள், என்ட்ரி லெவல் ஊழியர்கள் 12 சதவீதம் ஜிஎஸ்டி மூலம் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் டிவிட்டரில் 12% GST என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஹாஸ்டல் வாடகையில் 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி.. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரியாக்ஷன் என்னவாக இருக்கும். நான் ஹாஸ்டலில் தங்குவது இல்லை என்பதாக தான் இருக்கும் என டிவிட்டர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அட, அரசின் அற்புதமான நடவடிக்கை! மாணவர்களின் விடுதிக் கட்டணத்தில் 12% ஜிஎஸ்டியை அமல், யாருக்கும் எளிதான வாழ்க்கை தேவை இல்லை.. அப்படிதானே? மாணவர்கள் கல்வியைத் தொடர்வதை இன்னும் கடினமாக்குவோம்! மலிவு விலையை தொலைதூரக் கனவாக மாற்றுவதற்கான வழி இது என ஒருவர் புலம்பியுள்ளார்.

விடுதிகள், தங்கும் விடுதிகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி. ஏன் எல்லாவற்றிற்கும் ஜிஎஸ்டி விதிக்கக்கூடாது, உண்மையில் எல்லாவற்றிலும் ஜிஎஸ்டி. நமது வரி முறைக்கு சில தீவிர சீர்திருத்தங்கள் தேவை.

என் பார்வையில் பிளாட் 10% வருமான வர மற்றும் அனைத்து சேவை மற்றும் சரக்குகளுக்கும் பிளாட் 10% ஜிஎஸ்டி. உங்கள் பார்வை என்ன?

பிரபலமான கோட்டா பகுதியில் இருக்கும் ஹாஸ்டலில் சராசரியாக 20 அறைகள், படுக்கை மற்றும் ரூம்-க்கு 7000 ரூபாய், உணவுக்கு 4000 ரூபாய். இது வருடத்திற்கு 20 லட்சம் ரூபாய் விற்றுமுதல் அளிக்க கூடியவை. இப்புதிய வரி மூலம் ஹாஸ்டல் ஓனர்கள் இந்த ஜிஎஸ்டி வரியை மாணவர்களிடம் வாடகையை உயர்த்தி சமன் செய்துவிடுவார்கள் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹாஸ்டல் மற்றும் தங்கும் விடுதியில் செலுத்தப்படும் வாடகை இப்போது கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசத்தில் 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அடுத்து என்ன? கழிப்பறைகளுக்கும், சுவாசிக்கவும் ஜிஎஸ்டி வருமா? என கேள்வி எழுப்பியுள்ளார் ரவி என்பவர்.

ஹாஸ்டல் வாடகைக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் மாணவர்கள் விடுதிகளுக்காக அதிகம் செலவிட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நகரங்களில் படிக்க வைக்க பெரிய கடன் வாங்குகிறார்கள், இப்போது அவர்கள் அதிக பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. பாரதிய ஜனதா அரசு இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு பதிலாக, உயர்கல்வி படிப்பதற்காக அவர்களை தண்டித்து வருகிறது என டாக்டர் ஷாமா முகமது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் கேமிங்-கிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி, ஹாஸ்டல் கட்டணத்திற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி. இப்போது என்னுடைய நிலைமை இதுதான் என நிகில் மீம்ஸ் என்பவர் ஒரு GIF-ஐ தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications