இன்று வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ளது. அதிலும் சில நிறுவனங்கள் போடும் நிபந்தனைகள் வேலை தேடுபவர்களை கலங்க வைத்து வருகிறது. வேலை தேடுபவர்களுக்கு படிப்பு, வேலை குறித்த அறிவு அல்லது அனுபவம் இருப்பது வேலைக்கான தகுதிகளாக இதுவரை இருந்தது.
ஆனால் இனி வரும் காலத்தில், டிக்டாக், யூடியூப் போன்றவற்றில் வீடியோ மற்றும் ரீல்ஸ் பண்ண தெரிந்திருப்பதும் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு நிறுவனம், வேலை வேண்டுவோர் இனி பயோடேட்டா எல்லாம் அனுப்பாதீங்க, டிக்டாக்கில் வீடியோ அனுப்புங்க என்று தெரிவித்துள்ளது.

நம்ம நாட்டு தாஜ், ஐ.டி.சி. ஹோட்டல்கள் போன்று ஆஸ்திரேலியாவில் பிரபலமான சங்கிலித் தொடர் ஹோட்டல் நிறுவனம் ஹில்டன். இந்த ஹோட்டலில் வேலை கிடைக்காதா என்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்து கிடக்கின்றனர்.
தினமும் வேலை வேண்டி இந்நிறுவனத்துக்கு ஏராளமானோர் விண்ணப்பிப்பது வாடிக்கையான நிகழ்வு. இந்த சூழ்நிலையில், ஹில்டன் நிறுவனம், இனிமே யாரும் வேலை வேண்டி சி.வி. அல்லது கடிதங்கள் அனுப்பாதீங்க என்று அந்நாட்டு இளைஞர்களிடம் வலியுறுத்தியுள்ளது.
அதேசமயம், வேலை வேண்டுவோர் 30-60 நொடி கால டிக்டாக் வீடியோக்களை உருவாக்கி அனுப்புங்க என்று தெரிவித்துள்ளது. டிக்டாக் வீடியோ தானே ரொம்ப ஈஸியா பண்ணி அனுப்பலாமே என்று தான் நாம் நினைப்போம். ஆனால் இந்த இடத்தில் தான் அந்த ஹில்டன் ஒரு டிவிஸ்ட் வைத்து இருக்கு.
வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள், எந்த பதவிக்காக விண்ணப்பிக்கிறார்கள், வசிப்பிடம், ஹில்டன் விருந்தினர்களுக்கு வாடிக்கையாளர்கள்) தங்குவதை எப்படி மறக்கமுடியாததாக மாற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்பதை 60 நொடி டிக்டாக் வீடியோவில் உருவாக்கி அனுப்ப வேண்டும்.
அந்த வீடியோக்கள் விண்ணப்பதாரரின் பொதுவான டிக்டாக் கணக்கில் #HireMeHilton என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட வேண்டும். தேர்வு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று ஹில்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பிராந்திய மனித வள இயக்குனர் மேரி ஹாக் கூறுகையில், அதிக இசட் தலைமுறை (1990க்கு பிறகு பிறந்தவர்கள்) பணியாளர்களை ஈர்க்க நிறுவனம் இந்த சோதனை திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு சாட்போட் சாட்ஜிபி.டி ஆகியவற்றின் எழுச்சியும் இந்த முடிவுக்கு ஒரு காரணம். ஏனெனில் விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோடேட்டா மற்றும் வேலைக்கான கடிதங்களை எழுத சாட்ஜிபி.டி.-ஐ பயன்படுத்தலாம்.
உங்களுக்கு நல்ல தனிப்பட்ட திறன்களை கொண்ட ஒருவர் கிடைத்தால், விருந்தினர்களையோ அல்லது எந்த விஷயங்களில் ஏதேனும் ஒன்றையோ கையாள முடியும். அவர்களின் காகித பயோடேட்டாவை பார்த்து அவர்களால் அதை செய்ய முடியுமா என்று உங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications