2023 முதல் 2024-ஆம் ஆண்டில் உணவுப்பொருட்களுக்காக இந்திய குடும்பங்கள் செலவு செய்த தொகை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உணவுப்பொருள் பணவீக்கமாகும். ஏனெனில் சமையல் எண்ணெயைத் தவிர அனைத்து உணவுப் பொருட்களின் செலவும் 2002 முதல் 2023-ஆம் ஆண்டில் விற்கப்பட்டதை விட அதிகரித்து வருகிறது. இந்த தகவல்கள் வீட்டு உபயோக செலவுகள் குறித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கிராமப்புறங்களில் 2023-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டில் உணவுச் செலவுகளுக்காக தங்களுடைய மொத்த பணத்தில் 47.04 சதவீதத்தை செலவிட்டுள்ளனர். இது 2022 முதல் 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 46.38 சதவீதமாக இருந்தது. உணவுக்காக செய்யப்பட்ட மொத்த செலவுகளில் காய்கறிகளின் பங்கு 6.3 சதவீதமாகும். இது 2022 முதல் 2023-ஆம் ஆண்டில் 6.03 சதவீதமாக இருந்தது.

பழங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இருந்த 2.54 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டில் 2.66 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் சமையல் எண்ணெய்க்காக இந்திய மக்கள் செலவு செய்த தொகை 3.59 சதவீதத்திலிருந்து 2.77 சதவீதமாக குறைந்து இருக்கிறது.
கடந்த ஆண்டில் உணவுப் பணவீக்கம் அதிகரித்ததே செலவினங்கள் அதிகரித்ததற்கு காரணமாகும். காய்கறிகளின் பணவீக்கம் 13 மாதங்களாக இரட்டை இலக்கத்தில் தான் இருந்து வருகிறது. அதேபோல கணக்கெடுப்பில் சமையல் எண்ணெய் சற்று விலை குறைவாக இருந்து நிம்மதி வழங்கியது.
வீட்டுச் செலவுகளில் தானியங்களின் பங்கு முன்னணி வகித்தாலும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மாதாந்திர நுகர்வு குறைந்து வருவதும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மொத்தத்தில் உணவுக்கான செலவுகள் 50 சதவீதத்திற்கும் கீழே உள்ளது. ஆனால் 2011 முதல் 2012-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் மொத்தமாக உணவுக்காக மக்கள் செலவு செய்த தொகை 52.9 சதவீதமாக இருந்தது. இந்த விகிதத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் உணவுக்கான செலவுகள் சற்று குறைவாக உள்ளது.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தானியங்களை விட பதப்படுத்தப்பட்ட உணவு காய்கறிகள் மற்றும் பால் போன்ற பொருட்களுக்காக அதிகம் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் உணவுக்காக மக்கள் செலவு செய்யும் போக்குகள் மாறியுள்ளன. உணவு இல்லாத செலவுகள் வீழ்ச்சி அடைந்தன. ஆடை போக்குவரத்து மற்றும் நுகர்வோர் சேவைகள் ஆகியவை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதும் அறிக்கையில் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications