இந்தியாவில் அண்மைக்காலமாக நிதி சார்ந்த மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பங்குச்சந்தை முதலீடுகளை காட்டி கோடிக்கணக்கிலான பணம் மோசடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் முன்னோடியாக இருந்த ஒரு மோசடி குறித்து தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பால் வியாபாரி நிர்மல் சிங் பாங்கோ. இவர் ஐந்தரை கோடி இந்தியர்களை ஏமாற்றி ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர் 1970களில் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார். அப்போது அவருக்கு ஒரு சிட் ஃபண்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு சிட் ஃபண்டுகள் எப்படி இயங்குகின்றன, முதலீடுகள் என்றால் என்ன என்பன குறித்த அடிப்படை விழிப்புணர்வு கிடைத்தது.

இதனை அடுத்து 1980களில் பிஜிஎஃப் என்ற ஒரு நிறுவனத்தை அவர் தொடங்கினார். மக்கள் இந்த நிறுவனத்தின் மூலம் வேளாண் நிலங்களில் முதலீடு செய்ய முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 1996 ஆம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை பிஏசிஎல் என மாற்றம் செய்தார். பிஏசிஎல் நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை இந்த நிறுவனத்தின் வாயிலாக விவசாய நிலங்களில் முதலீடு செய்யலாம். அவர்கள் முதலீடு செய்த 90இல் இருந்து 270 நாட்களுக்குள் அதற்கான விவசாய நிலம் அவர்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அல்லது அவர்கள் வழங்கிய தொகையில் தொகைக்கு வட்டி போட்டு கூடுதல் தொகையாக அவர்களிடமே ஒப்படைக்கப்படும்.
பல்வேறு நபர்களும் இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டனர். இதில் கமிஷனும் கிடைத்ததால் பலரும் உறவினர்கள் நண்பர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்தனர். ஆனால் பொதுமக்களிடமிருந்து பணத்தை வாங்கிய இந்நிறுவனம் கூறியபடி நிலத்தையும் வழங்கவில்லை அவர்களிடம் வாங்கிய தொகையையும் வழங்கவில்லை.
ஏஜெண்டுகளை உருவாக்கி கிராமப்புறங்களில் இருந்த மக்களை குறிவைத்து தான் இந்த மோசடியை அரங்கேற்றியது. இவ்வாறு மக்களிடம் இருந்து திரட்டப்படும் பணமானது வெளிநாடுகளில் இருக்கும் ஷெல் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஹவாலா நெட்வொர்க் வாயிலாக இந்த பணம் பலரது கைகளுக்கு மாறி சென்றது. ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு எந்த ஒரு லாபமும் வழங்கப்படவில்லை.
1998 ஆம் ஆண்டு செபி நடத்திய விசாரணையில் பிஏசிஎல் நிறுவனம் ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல என்பதை கண்டறிந்தது. செபியின் விசாரணைக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ராஜஸ்தான் உயர்நீதிமன்றமும் பிஏசிஎல்க்கு ஆதரவாக தீர்ப்பினை தந்தது. இதனை தொடர்ந்து பிசிஏஎல் நிறுவனம் ஐபிஎல் டீம்களை வாங்கியது ,கபடி விளையாட்டுகளை நடத்தியது , ஹிந்தியில் ஒரு செய்தி சேனலையே நடத்தி வந்தது.
ஆனால் மறுபுறம் மக்களிடமிருந்து முதலீடு என்ற பெயரில் வாங்கிய பணத்தை திரும்ப வழங்காமல் ஏமாற்றியும் வந்தது . இதனை அடுத்து செபி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை விசாரித்து பிஏசிஎல் நிறுவனம் செபியின் சிஏஎஸ் அமைப்புக்குள் அமைப்புக்கு உட்பட்ட நிறுவனம் தான் என உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து செபி பிஏசிஎல் நிறுவனம் உடனடியாக தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தங்களிடம் முதலீடு செய்தவர்களுக்கு 49, 100 கோடி ரூபாயை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது.
இதனை அடுத்து நிர்மல் சிங் பாங்கோ செய்த மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது. செபி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பாங்கோவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்தனர். சந்தேகத்திற்கு இடமான 1300க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கினர் . அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பாங்கோவுக்கு சொந்தமாக வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடிகளுக்கு சொத்துக்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்காகவே செபி தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கியது. 2024 ஆம் ஆண்டு சிறையிலேயே நிர்மல் சிங் பாங்கோ உயிரிழந்தார். ஆனால் இதுவரை அவரை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு இதுவரை அவர்களின் பணம் முழுமையாக சென்று சேரவில்லை.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications