Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

ஒரு பவுன் தங்கம் லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. சொல்லப்போனால் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என அனைத்தும் சேர்த்து 1.50 லட்சத்தை நெருங்கி விடுகிறது. ஆனால் எவ்வளவு தான் விலை ஏறினாலும் எங்களுக்கு கவலையில் எனும் விதமாக இருக்கிறது இந்தியர்களின் தங்கத்தின் மீதான மோகம். அதற்கு மிகச் சிறந்த சாட்சியே நகைக்கடைகளில் உலா வரும் கூட்டம் தான். விலை உச்சத்தை எட்டினாலாவது மக்கள் வாங்குவதை குறைப்பார்களா என்று எதிர்பார்த்த நிபுணர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சியே பதிலாகவும் கிடைத்துள்ளது.

ஏனெனில் கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் மதிப்பு சுமார் 5.7 லட்சம் கோடி ரூபாயாக மலைக்க வைக்கும் அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 29% அதிகமாகும். நகை பிரியர்கள் விலைவாசியை கண்டுகொள்ளாமல் இருந்தாலும், மறுபுறம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது மத்திய நிதியமைச்சகத்தை நெருக்கடிக்கு நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த அதிரடியான உயர்வுக்கு காரணம் மக்களின் ஆசையா அல்லது பாதுகாப்பான முதலீடாக கருதுவதா? இதற்கிடையில் அரசின் நடவடிக்கை என்ன. வாருங்கள் பார்க்கலாம்.

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

வலுவான தேவை மற்றும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளுக்கு மத்தியில், தங்கம் இறக்குமதி மதிப்பானது எகிறியுள்ளது. இது வர்த்தக பற்றாக்குறை குறித்த கவலை மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை பற்றிய கவலையையும் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி 2025 - 26 வரையிலான காலகட்டத்தில் தங்கம் இறக்குமதியானது கிட்டத்தட்ட 29% அதிகரித்து, சுமார் 5.7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வந்தால், இறக்குமதியானது அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4.52 லட்சம் ரூபாயாக இருந்தது.

Also Read

இந்த அதிரடி மாற்றத்தால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை முந்தைய நிதியாண்டில் 261.80 பில்லியன் டாலராக இருந்து, நடப்பு 11 மாத காலத்தில் 310.60 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் 10 கிராம் தங்கம் விலையானது சுமார் 1,51,500 ரூபாயாக உச்சத்தில் காணப்படுகிறது. விலை அதிகரிப்பால் தேவை சற்று குறைந்திருந்தாலும், நகைத்துறையில் தேவையானது பெரிய அளவில் குறையவில்லை. இதனால் தான் இறக்குமதி உச்சத்தை எட்டி பிடித்துள்ளது.

இந்தியாவின் ,மொத்த இறக்குமதியில் தங்கம் மட்டும் 5% பங்கு வகிக்கிறது. இது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆச்சரியப்படுத்தும் விதமாக வெள்ளியின் இறக்குமதி 142.87% அதிகரித்து, 11.43 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள் மற்றும் மருந்து துறைகளில் ஏற்பட்ட தேவை காரணமாக இந்த அபரிதமான உயர்வு ஏற்பட்டுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+