ஒன்றுமே இல்லாமல் தொழிலை தொடங்கி படிப்படியாக விரிவாக்கம் செய்து மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பல்வேறு தொழில் முனைவோர்களின் கதைகள் இந்தியாவில் இருக்கின்றன. இவ்வாறு ஒன்றும் இல்லாமல் தொடங்கி பெரிய நிலைக்கு வந்தவர்களில் சிலர் விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நிதி சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டு தங்களுடைய வாழ்க்கையை இழக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு நபரின் கதை தான் இது.
சி.ஆர்.சுப்பிரமணியன் ஒரு காலத்தில் புகழ்பெற்ற தொழில் முனைவராக இவர் இருந்தார். பொறியாளர், வங்கி ஊழியர், தொழில் முனைவோர் என பன்முகம் கொண்ட நபர் தான் சி.ஆர்.சுப்பிரமணியன். தற்போது இவர் 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வருகிறார். ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர் தான் சி.ஆர். சுப்பிரமணியன். இங்கே பொறியியல் பிரிவில் இளநிலை படிப்பை முடித்த இவர் பின்னர் ஐஐஎம்-இல் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார்.

சில காலம் பொறியாளராகவும் சில காலம் வங்கியிலும் வேலை செய்த அனுபவம் இவருக்கு உண்டு. 1991 ஆம் ஆண்டு விஸ்வபிரியா என்ற நிதி சார்ந்த சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனத்தை தொடங்கினர். பல்வேறு வகையான நிதி சார்ந்த திட்டங்களை மக்களிடம் விளம்பரம் செய்து அவர்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாக திரட்டினார் .இந்த நிலையில் 6 ஆண்டுகள் கழித்து 1997 ஆம் ஆண்டு சுபிக்ஷா என்ற ஒரு சில்லறை விற்பனை தொழிலை நிறுவினார்.
படிப்படியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவருடைய சுபிக்ஷா கடைகள் விரிவடைய தொடங்கின. பின்னர் இந்தியா முழுவதும் 1600 இடங்களில் சுபிக்ஷா சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டன. 4000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நபராக இவர் மாறினார்.ஆனால் பின்னர் தான் இவருக்கு பிரச்சினையே ஏற்பட்டது. இவர் தன்னுடைய விஸ்வ பிரியா நிதி சேவை நிறுவனத்திற்காக பலரிடமிருந்து டெபாசிட் பெற்று கொண்டு அந்த பணத்தை வெளிநாட்டில் இருக்கும் ஷெல் நிறுவனங்களுக்கு அனுப்பி பல கோடி ரூபாய்க்கு மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தான் இவருடைய மோசடி வெளி வந்தது. இந்த சூழலில் அவர் மீதான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு 2023 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
கிட்டத்தட்ட 137 கோடி ரூபாயை அவர் ஏமாற்றி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் சுப்பிரமணியத்திடம் இருந்து இந்த பணத்தை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு தர வேண்டும் என அறிவித்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications