தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்கிறதே என்று கவலையில் இருக்கிறீர்களா? உங்களுக்காகவே பட்ஜெட் ஒரு இரண்டாவது வாய்ப்பை கதவருகே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி வீழ்ச்சி, சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதனை உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி, தற்போது ஒரு தற்காலிக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த சரிவு வெறும் ஆரம்பமா அல்லது பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கப் போகும் இறக்குமதி வரி குறைப்பு விலையை இன்னும் அதலபாதாளத்திற்கு கொண்டு செல்லுமா? ஏற்கனவே கொடுத்த வாய்ப்பை மிஸ் செய்தவர்கள் இப்போது வாங்கலாமா அல்லது பட்ஜெட் உரை முடியும் வரை காத்திருப்பதே புத்திசாலித்தனமா? நகை பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்துள்ள இந்த பட்ஜெட் சண்டே வர்த்தகத்தில், தங்கம் மற்றும் வெள்ளி விலை அடுத்த கட்டமாக எங்கே செல்லும்? ஒரு விரிவான அலசல் இதோ..

நல்ல சான்ஸ்?
நடப்பு வார தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உச்சத்திலிருந்து சற்று குறைந்திருந்தாலும், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு முதலீட்டாளர்களின் கவனம் இன்னும் இதன் மீது அதிகரித்துள்ளது. விலையில் ஏற்பட்டுள்ள இந்த சிறு சரிவு, புதிய முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல நுழைவு புள்ளியாக பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி 29 அன்று பியூச்சர் சந்தையில் 10 கிராம் தங்கம் 1.80 லட்சம் என்ற புதிய உச்சத்தை தொட்டது. தற்போது பிப்ரவரி மாதத்திற்கான பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் ₹1.69 லட்சம் என்ற அளவில் வர்த்தகமாகின்றன. இதே பியூச்சர் வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது கிலோ 4.08 லட்சம் ரூபாயிலிருந்து தற்போது சுமார் 4.05 லட்சம் ரூபாய் என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. இருப்பினும் இது ஜனவரி தொடக்கத்தில் இருந்த விலையை விட மிக அதிகம்.
சர்வதேச சந்தை மற்றும் இந்திய ரூபாயின் தாக்கம்
சர்வதேச சந்தையிலும் இதே போன்ற போக்கே நிலவுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் 5,600 டாலரைத் தாண்டிய பிறகு, தற்போது சுமார் 10% - 15% வரை சரிவை கண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பயன்படுத்தும் தங்கத்தில் கிட்டத்தட்ட 100%-மும், வெள்ளியில் 80%மும் இறக்குமதி மூலமே பயன்படுத்தப்படுகிறது. அதாவது பெரிய அளவில் இறக்குமதியை மட்டும் சார்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்காக பெரும் அந்நிய செலாவணி வெளியேறியதால், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து, இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இதுவும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கும். ஆக தங்கம் விலையை குறைக்க வரியை குறைத்தால், வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்க அரசே வழி காட்டியது போல் ஆகிவிடும். அப்படி செய்யாவிடில் தங்க கடத்தல் போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரிக்கும். மொத்தத்தில் இவ்விரண்டையும் கருத்தில் அரசு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், எந்த மாதிரியான அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாறிவரும் முதலீட்டு முறைகள்
தங்கம், வெள்ளி விலை உயர்வால் நகைகளாக வாங்குவது சற்று குறைந்திருந்தாலும், முதலீட்டு ரீதியாக தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. 2025-ல் கோல்ட் இடிஎஃப் (ETF) முதலீடுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 40,000 கோடி ரூபாய் வரையில் புதிய முதலீடுகள் வந்துள்ளன. அதேபோன்று வெள்ளி இடிஎஃப்-களும் தங்கத்தை விட வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆக தங்கம் வெள்ளிக்கு சாதகமான அறிவிப்பே வந்தாலும், அது டிஜிட்டல் தங்கம், வெள்ளியை ஊக்குவிக்கும் விதமாக வரலாம்.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: வரி குறையுமா?
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-லிருந்து 6%-ஆக குறைக்கப்பட்டது. இது தங்க கடத்தலை கட்டுப்படுத்த உதவியது. தற்போது விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதால் நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வரியை மேலும் குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் அது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும், நகைகள் வாங்கும் போது பான் கார்டு கட்டாயமாக்கப்படும் வரம்பை 2 லட்சத்திலிருந்து உயர்த்த வேண்டும். தற்போதைய விலையில் ஒரு சாதாரண திருமண நகை வாங்கினாலே இந்த வரம்பை தாண்டிவிடுகிறது. அப்படியிருக்கையில் இது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!
தற்போது தங்கம் மீதான அடிப்படை இறக்குமதி வரி 6% ஆக உள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதில் மாற்றம் வருமா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக விலை குறைந்தால் அதை குறைந்த விலையில் வாங்க வாய்ப்பாக இருக்கும். ஆனால் எதிர்பார்ப்பதை போல் வரி குறைக்கப்பட்டால் சற்று பொறுத்து இரண்டாவது வாய்ப்புக்காக காத்திருக்கலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications