எல்லாம் வணிகம்.. பணம் கொழிக்கும் கிரிக்கெட்.. எல்லோருக்கும் ஏதாவது பங்கு கிடைக்கிறது.. எப்படி?

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் (2023) முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பே வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆம், மைதானங்கள் காலியாக கிடந்தால் என்ன. பிசிசிஐ ஏற்கனவே மில்லியன் டாலர் கணக்கில் வசூலித்துவிட்டது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் பணம் எங்கெல்லாம் புழங்குகிறது. இதோ ஒரு பார்வை உங்களுக்காக..

எல்லாம் வணிகம்.. பணம் கொழிக்கும் கிரிக்கெட்.. எல்லோருக்கும் ஏதாவது பங்கு கிடைக்கிறது.. எப்படி?

வெற்றி பெறும் அணி 4 டாலர் மில்லியனைப் பரிசாக பெறும். 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர். கால்பந்து உலகக் கோப்பை போன்ற ஒரு விளையாட்டு நிகழ்வோடு ஒப்பிடும்போது, பரிசுப் பணம் குறைவாகவே உள்ளது. கத்தாரில் கடந்த ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா, 42 மில்லியன் டாலர் பரிசுத் தொகையைப் பெற்றது.

கிரிக்கெட்டில் பல்வேறு உலகக் கோப்பைகளுக்கான ஒளிபரப்பு உரிமையைப் பெற்ற ஸ்டார், 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை வரையிலான கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப கடந்த 8 ஆண்டு காலத்திற்கு வெறும் $2.02 பில்லியன் மட்டுமே செலுத்தியுள்ளது. இது கால்பந்தாட்ட உரிமையை வாங்கும் நிறுவனங்களை விட மிகக்குறைவாகும்.

அதேநேரம், இப்போது மவுசு கூடிவிட்டது. டிஸ்னி ஸ்டார் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு $3 பில்லியன் டாலரை தர ஒப்புக்கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒரு நாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளுக்கான உரிமத்தை வாங்கியுள்ளது.

இதில் தங்க முட்டையிடும் வாத்து என்றால் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகும், அதன் வருடாந்திர ஒளிபரப்பு வருவாய் இப்போது அமெரிக்க தேசிய கால்பந்து லீக் (NFL) மற்றும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போன்ற சிறந்த உலகளாவிய விளையாட்டு லீக்குகளுக்கு இணையாக உள்ளது. இந்த ஆண்டுக்கான விளம்பர வருவாய் மட்டும் ரூ.10,000 கோடியைத் தாண்டியுள்ளது.

எல்லாம் வணிகம்.. பணம் கொழிக்கும் கிரிக்கெட்.. எல்லோருக்கும் ஏதாவது பங்கு கிடைக்கிறது.. எப்படி?

ஐபிஎல் தொடர், விளையாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. குறைந்த நேரமே விளையாடும் இப்போட்டிகளில் ஒன்டே, டெஸ்டை விட அதிக தொகை கிடைக்கிறது. இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் பணம் சம்பாதிக்கும் மற்றும் செலவிடும் சந்தையை திறந்துவிட்டுள்ளது.

டிஸ்னி ஸ்டார் 3 பில்லியன் டாலரை தந்து ஒளிபரப்பு உரிமையை வாங்கினால், அதில் விளம்பரங்களை தந்து இந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் கோகோ கோலா உள்ளிட்ட ஸ்பான்சர்கள் வணிகத்தை பெருக்குகிறார்கள். இது அனைவருக்கும் வெற்றி என்ற கொள்கையை நிலை நிறுத்துகிறது. அவ்வளவு ஏன் ஸ்விக்கி, ஜொமோட்டோவிலும், உணவகங்களிலும் விற்பனை கூடியுள்ளதே. நேற்று மட்டும் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 250 பிரியாணி பொட்டலங்கள் ஆர்டர் செய்யப்பட்டன என்கிறது ஸ்விக்கி. சண்டிகரில் ஒரே குடும்பம் 70 பிரியாணியை வாங்கி, கிரிக்கெட் பார்ப்பதை, சொந்தக்காரர்களுடன் கறி விருந்து சாப்பிட்டு காது குத்து விழா நடத்தியதை போல கொண்டாடியுள்ளது. கிரிக்கெட்டை மட்டும் தவிர்த்து பார்த்தால் இது எத்தனை பேருக்கு பொருளாதார இழப்பாக இருந்திருக்கும் அல்லவா.

புள்ளி விவரம்: உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டித் தொடரால், இந்தியப் பொருளாதாரத்திற்கு $10 பில்லியனுக்கும் அதிகமான பங்கு கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.
நாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
போட்டியின் போது நாடு முழுவதும் ஹோட்டல் ரூம் புக்கிங் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
கிரிக்கெட் தொடர்பான பொருட்களின் விற்பனை உயர்ந்துள்ளது.
1 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருகிறார்கள். அவர்கள் பயணம், தங்குமிடம் மற்றும் பிற செலவுகளுக்காக $2 பில்லியன் செலவிட வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+