தீங்கு விளைவிக்கும் பொருட்கள் 40% வரி சரியான முடிவு.. வரவேற்கும் கோவை டாக்டர் திருவேங்கடம்.!!

மத்திய அரசு சமீபத்தில் எடுத்த ஒரு முக்கிய முடிவு, எனர்ஜி டிரிங்க்ஸ், சிகரெட் மற்றும் குட்கா போன்ற 'தீங்கு விளைவிக்கும் பொருட்கள்' (Sin Goods) மீது 40% சரக்கு மற்றும் சேவை வரியை விதித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை, ஆரோக்கியமற்ற பொருட்களின் நுகர்வைக் குறைத்து, நாட்டு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மருத்துவர்கள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கோவை மாவட்டம் கற்பகம் மருத்துவமனை டாக்டர் திருவேங்கடம் வரவேற்றுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் சர்க்கரை அல்லது இனிப்பு சேர்க்கப்பட்ட அனைத்து பானங்களுக்கும் (ஏரேட்டெட் வாட்டர் உட்பட) 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து குட்ரிட்டர்ன்ஸ் தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், தற்போதைய ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கு நன்மையளிக்கும் என்றும், தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு வரியை அதிகரித்திருப்பது அந்த பொருட்களை பயன்படுத்தும் நுகர்வோருக்கு பெரும் செலவினங்களை ஏற்படுத்தும் என்றும் இதுவே அவர்களுக்கு அந்த பொருட்கள் மீதான ஆர்வத்தை குறைக்க தூண்டுவதுடன் உடல் நலமும் பாதுகாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 தீங்கு விளைவிக்கும் பொருட்கள் 40% வரி சரியான முடிவு.. வரவேற்கும் கோவை டாக்டர் திருவேங்கடம்.!!

ஆரோக்கியத்திற்கான ஒரு வரிக் கொள்கை: மருத்துவர் திருவேங்கடம் கூறுகையில், இந்த ஜிஎஸ்டி உயர்வு, வெறும் வரிக் கொள்கை மட்டுமல்ல, இது மக்களின் ஆரோக்கியத்திற்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது என்றும், சர்க்கரை மற்றும் காஃபின் கலந்த பானங்களை அதிகம் உட்கொள்வது, இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய்களுக்கு ஒரு முக்கியக் காரணமாகும். இந்தப் பானங்களின் விலையை அதிகரிப்பதன் மூலம், ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு தெளிவான செய்தியை நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளது. அதாவது, ஆரோக்கியமற்ற பொருட்களை தவரிக்க வேண்டும் என்பதுதான்.

உலகளவில், புகையிலை, மதுபானம் மற்றும் சர்க்கரை உணவுகள் போன்ற ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் மீதான பொருட்கள் நுகர்வைக் குறைப்பதில் பல நாடுகள் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த நடவடிக்கை, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே அதிக எடை, உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் அதிகரிப்பதைத் தடுக்க உதவும். இதனால் மாரடைப்பு போன்ற அபாய நோய்களை தடுக்கவும் முடியும் என்று கூறியுள்ளார்.

 தீங்கு விளைவிக்கும் பொருட்கள் 40% வரி சரியான முடிவு.. வரவேற்கும் கோவை டாக்டர் திருவேங்கடம்.!!

அதேபோல், காலப்போக்கில், இந்த வரிவிதிப்பு நுகர்வோர் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், மக்கள் சர்க்கரையைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, ஆரோக்கியமான மாற்றுப் பொருட்களை நோக்கித் திரும்புவார்கள். இதன்மூலம், நாட்டின் சுகாதாரம் மேம்படும்.

 தீங்கு விளைவிக்கும் பொருட்கள் 40% வரி சரியான முடிவு.. வரவேற்கும் கோவை டாக்டர் திருவேங்கடம்.!!

எனினும், வரிவிதிப்பு மட்டும் இந்தப் பிரச்சனைக்கு முழுத் தீர்வாகாது என்றும், இந்த ஜிஎஸ்டி உயர்வுக்கு இணையாக, விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், ஆரோக்கியமான மற்றும் மலிவான மாற்றுப் பொருட்களுக்கான ஊக்குவிப்பு, மற்றும் விளம்பரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ள விளம்பரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இந்த அதிரடி வரி உயர்வு, குறிப்பாக நீரிழிவு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எவ்வாறு உதவும் என்பது குறித்த கேள்விகளுக்கு டாக்டர் கூறிய பதில்களைக் காணலாம்.

1. 40% ஜிஎஸ்டி உயர்வு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுமா?: சர்க்கரை கலந்த பானங்கள், நீரிழிவு நோய் பரவலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்த பானங்களில் அதிகப்படியான கலோரிகளும், சர்க்கரையும் உள்ளன. அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது, உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, இறுதியில் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வழிவகுக்கிறது.

இந்த புதிய 40% ஜிஎஸ்டி வரி உயர்வு, நேரடியாக இந்தப் பானங்களின் விலையை அதிகரிக்கும். விலை அதிகரிக்கும்போது, நுகர்வோர்கள், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர், அவற்றைக் வாங்குவதை குறைப்பார்கள். இது, சர்க்கரை பானங்களின் நுகர்வைக் குறைத்து, அதன் மூலம் உடலில் சேரும் தேவையற்ற சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். உதாரணமாக, ஒரு சோடா பாட்டிலின் விலை திடீரென இரு மடங்கு அதிகரிக்கும்போது, மக்கள் அதை வாங்குவதைத் தவிர்க்கலாம். இந்த சிறிய மாற்றம், ஒட்டுமொத்த சமூகத்தில் சர்க்கரை நுகர்வைக் குறைத்து, நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்க உதவும். வரிவிதிப்பு மூலம் ஒரு பொருளின் நுகர்வை பாதிப்பது, உலகளவில் பொது சுகாதாரப் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வெற்றிகரமான உத்தி.

2. இந்த வரிக் கொள்கை மக்களை ஆரோக்கியமான பானங்களுக்கு மாற்ற ஊக்குவிக்குமா?: நிச்சயமாக, இந்த வரிக் கொள்கை மக்களை ஆரோக்கியமான மாற்றுப் பானங்களை நோக்கித் தள்ளும். ஒரு பொருள் விலை அதிகமாகும்போது, அதே தேவைக்கு மலிவான அல்லது ஆரோக்கியமான மாற்றுப் பொருட்களை மக்கள் தேடுவார்கள். சர்க்கரை கலந்த பானங்களுக்குப் பதிலாக, மக்கள் தேர்வு செய்யக்கூடிய பல ஆரோக்கியமான மாற்றுப் பொருட்கள் உள்ளன.

தண்ணீர்: இது எந்தச் செலவும் இல்லாமல், உடலுக்குத் தேவையான நீரை அளிக்கும் மிகச்சிறந்த பானம்.

பழச்சாறுகள்: புதிதாகப் பிழியப்பட்ட பழச்சாறுகள், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது ஆரோக்கியமானதாகும்.

காய்கறி ஜூஸ்: பீட்ரூட், கேரட், கீரை போன்ற காய்கறிகளைச் சாறாக எடுத்து அருந்துவது உடலுக்கு பல நன்மைகளைத் தரும்.

இளநீர்: இது இயற்கையான சர்க்கரை மற்றும் தாதுக்களைக் கொண்ட ஒரு சிறந்த பானம்.

மோர்: புரோபயாடிக் நிறைந்த மோர், செரிமானத்திற்கும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.

சுகாதாரமான காபி மற்றும் தேநீர்: சர்க்கரை சேர்க்காத தேநீர் அல்லது காபி, தினசரி எனர்ஜிக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

ஜிஎஸ்டி உயர்வால் குளிர்பானங்களின் விலை அதிகரிக்க, அதே சமயம், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காபி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதால், மக்கள் ஆரோக்கியமான விருப்பங்களை எளிதாகத் தேர்ந்தெடுக்க முடியும்.

 தீங்கு விளைவிக்கும் பொருட்கள் 40% வரி சரியான முடிவு.. வரவேற்கும் கோவை டாக்டர் திருவேங்கடம்.!!

3. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே நீரிழிவு நோயைத் தடுப்பதில் இது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?: இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் சர்க்கரை பானங்களின் உட்கொள்வதில் முக்கிய பங்காற்றுகின்றனர். விளம்பரங்கள் மற்றும் சமூக செல்வாக்கு காரணமாக, இந்தப் பானங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சிறு வயதிலேயே அதிக சர்க்கரை உட்கொள்வது, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. இந்த வயதினரிடையே நீரிழிவு நோய் வருவது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைத் தரத்தை கடுமையாகப் பாதிக்கும்.

இந்த 40% ஜிஎஸ்டி உயர்வு, இந்தப் பானங்களை குழந்தைகளுக்குக் கிடைப்பதைத் தடுக்கும் ஒரு முக்கியத் தடையாக அமையும். பள்ளிக் கேன்டீன்கள் அல்லது கடைகளில் இந்தப் பானங்களின் விலை அதிகரிக்கும்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித் தருவதைக் குறைப்பார்கள். மேலும், குழந்தைகள் தங்கள் கைச்செலவில் இந்தப் பானங்களை வாங்குவது கடினமாக இருக்கும். இதன் விளைவாக, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே சர்க்கரை நுகர்வு இயல்பாகவே குறையும்.

இருப்பினும், வரிவிதிப்பு மட்டும் முழுத் தீர்வாகாது. இது ஒரு வலுவான முதல் படி மட்டுமே. இதற்கு இணையாக, பள்ளிகளில் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சர்க்கரை பானங்களின் விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான பானங்களை எளிதாகக் கிடைக்கும்படி செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, வருங்கால சந்ததியினரை நீரிழிவு நோய் மற்றும் பிற வாழ்க்கை முறை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் என்று டாகடர் திருவேங்கடம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+