தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தின் விலை 50%க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் 30% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை தங்கம் பதிவு செய்திருக்கிறது. இந்த சூழலில், தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் நகை மற்றும் முதலீடு ஆகிய காரணங்களுக்காக தங்கத்திற்கான தேவை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து N. A. ஷா அசோசியேட்ஸ் LLP-இன் நேரடி வரிப் பங்குதாரர் மிலின் பக்காவி கூறுகையில், தங்கம் என்பது பாரம்பரியமாகவே, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில், தங்கத்தில் முதலீடு செய்யும் முறைகள் மாறியுள்ளன. தற்போது தங்க ETF மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் என பல வழிகளில் பரிணாமம் அடைந்துள்ளன.

தங்கத்தை எந்த வடிவத்தில் முதலீடு செய்தாலும், அதை விற்கும்போது கிடைக்கும் லாபத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், SGB-களை முதிர்வு காலம் வரை வைத்திருந்தால், அதற்கு கிடைக்கும் லாபத்திற்கு மட்டும் வரி கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.
Tax2win நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் சோனி கூறுகையில், "தங்கம் வாங்கும்போது வருமான வரி பொருந்தாது. இருப்பினும் தங்கம் மீது 3% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. மேலும், செய்கூலி தொகைக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால், தங்கத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
நிதி சட்டம் 2024-இன் திருத்தங்களால், 2024 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல், தங்க ETF, தங்க மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றின் மீதான மூலதன வரி விதிப்பு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்" சுட்டிக் காட்டியுள்ளார்.
தங்கப் பத்திரங்களுக்கு வரி விதிப்பு எப்படி..?:SGB-கள் என்பவை மத்திய அரசால் ரிசர்வ் வங்கி (RBI) மூலம் வெளியிடப்படும் பத்திரங்கள் ஆகும். இவை 999 தூய்மையான தங்கத்தால் உறுதி செய்யப்படுகின்றன. இதன் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். தங்கம் விலை உயர்வது மூலம் லாபம் கிடைப்பதுடன், ஆரம்ப முதலீட்டு தொகைக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியும் இந்த முதலீடுகளுக்கு கிடைக்கும்
வரி விதிப்பு விதிகள் : முதலீட்டாளர் SGB-களை முதிர்வு காலம் அதாவது, 8 ஆண்டுகள் வரை வைத்திருந்தால், அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வருமான வரி கிடையாது.
அதேசமயம், SGB-களைப் பங்குச் சந்தை மூலம் முதிர்வுக்கு முன்பே விற்பனை செய்தால், குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். 12 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாக வைத்திருந்தால் கிடைக்கும் லாபத்தை பொறுத்து உங்களுக்கு வருமான வரி விதிக்கப்படும். 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால், லாபத்தின் மீது 12.5% வரி விதிக்கப்படும்.
More From GoodReturns

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!



Click it and Unblock the Notifications