சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாக நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத உச்சத்தை எட்டியுள்ளது. இருந்தாலும் இந்தியாவில் திருமணங்கள் போன்ற விசேஷங்களுக்கும் தங்க நகைகளுக்குமான தொடர்பு என்பது மிக நெருக்கமானது.
இப்படி நாம் வாங்கும் தங்க நகைகளுக்கு நகை கடைகள் எப்படி விலையை நிர்ணயம் செய்கின்றன என்பதை தெரிந்து கொள்வது கட்டாயம்.

பொதுவாக இந்தியாவில் தங்கத்தின் விலை தினம்தோறும் நிர்ணயிக்கிடப்படுகிறது. அதாவது தினமும் காலையில் தங்க நகை வியாபாரிகள் சங்கம் கூடி பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கிறது.
அந்த விலை நிர்ணயத்திற்கு ஏற்ப வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் தங்க நகைகள் மற்றும் தங்கம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு நகரத்திற்கும் தினம்தோறும் தங்கத்தின் விலையை அறிவிப்பதற்கான ஒரு உள்ளூர் சங்கம் இருக்கிறது.
இந்தியாவில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு தங்கத்தின் விலையில் வேறுபாடுகளை காண முடியும். இதில் பெரிய அளவிலான வித்தியாசம் இருக்காது. நகைகளின் விலை என்பது செய்கூலி, வரிகள் மற்றும் தங்கத்தின் தூய்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் நகரங்களுக்கு நகரம் வேறுபடுகிறது.
தங்க நகையின் விலையை கணக்கிடுவதற்கு நகை கடைக்காரர்கள் எந்த பார்முலாவை பயன்படுத்துகிறார்கள் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
தங்க நகையின் விலை = ஒரு கிராம் தங்கத்தின் விலை (22 கேரட் அல்லது 18 கேரட்) x கிராமில் எடை + கிராமிற்கான மேக்கிங் கட்டணம் + (நகையின் விலை+மேக்கிங் கட்டணம்) மீதான ஜிஎஸ்டி வரி
உதாரணமாக :
10 கிராம் விலை (22 காரட் தங்கம்) = ரூ.30,000
1 கிராம் விலை (22 காரட் தங்கம்) = ரூ 3,000
வாங்கும் தங்க நகையின் எடை: 20 கிராம்
மேக்கிங் கட்டணம்= ரூ 300/கிராம்
ஜிஎஸ்டி= 3%
எனவே, நகையின் மொத்த விலை: ரூ. 3,000 x 20 கிராம் + (20 கிராம் x ரூ. 300) = ரூ. 66,000
இந்த மொத்த விலையில் ஜிஎஸ்டி 3% எனும் போது,
66,000 + 3% = ரூ. 67,980.
எனவே, இந்த நகை வாங்குவதற்கு ரூ.67,980 செலுத்த வேண்டும்.
தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வதில் பல்வேறு காரணிகள் தாக்கம் ஏற்படுத்துகின்றன.
1. கேரட் அளவு: தங்கத்தின் மதிப்பு கேரட்டில் அளவிடப்படுகிறது. அதிகபட்சம் 24 கேரட் ஆகவும், குறைந்தபட்சம் 22 கேரட் ஆகவும் உள்ளது. பொதுவாக நகைகள் செய்வதற்கு 18 மற்றும் 22 கேரட் நகைகள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
2. மேக்கிங் கட்டணம்: நகைக்கடைக்காரர்கள் நகைகளை வடிவமைப்பதற்காக வசூலிக்கும் கட்டணமே மேக்கிங் கட்டணம் எனப்படுகிறது. இது வடிவமைப்பின் நுணுக்கம் மற்றும் அதற்காக போடப்பட்ட உழைப்பின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.
3. கற்கள்: நகைகளில் பொருத்தப்பட்டுள்ள கற்களின் அடிப்படையிலும் தங்க நகையின் விலை மாற்றம் காணும். முத்து மற்றும் கற்கள் பதிப்பதை பொறுத்து விலை ஏறும்.
4. ஜிஎஸ்டி: தங்க நகைகள் மீதான ஜிஎஸ்டி வரி என்பதும் அதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணியாகும்.
5. பிராண்ட்: சில சமயங்களில் நாம் வாங்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட நகை கடையின் பிராண்ட் வேல்யூ மற்றும் அதன் புகழ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் தரம் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்க நகையின் விலை சற்றே அதிகமாக இருக்கக்கூடும்.
More From GoodReturns

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!



Click it and Unblock the Notifications