சாமானிய மக்களை கண்ணீர் வடிக்கவைத்த தங்கம் விலை.. 2024இல் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

2024 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை பல உச்சங்களை கண்டது. சாமானிய மக்கள் இனி தங்க நகையே வாங்க முடியாது என கூறும் அளவுக்கு தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி சென்னையில் 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை 5855 ரூபாயாக இருந்தது. அதுவே டிசம்பர் 25ஆம் தேதி சென்னையில் 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,100 ரூபாய் என இருக்கிறது. தங்கத்தின் விலையை பொருத்தவரை இந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. குறிப்பாக ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றத்திலே தான் இருந்தது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றத்தை அடைந்தது.

சாமானிய மக்களை கண்ணீர் வடிக்கவைத்த தங்கம் விலை.. 2024இல் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவிய பொருளாதார மந்த நிலை காரணமாக பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி வந்தனர்.

அடுத்ததாக ஈரான் இஸ்ரேல் இடையிலான மோதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் ஆகியவை காரணமாக அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் அவ்வப்போது போர் மூலக் கூடிய சூழலும் உண்டாகி கொண்டே இருந்தது. இதுவும் தங்கத்தின் விலையை உயர்த்தியது.

இது ஒரு புறம் இருந்தாலும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் வாங்கி கையிருப்பு வைத்தன. இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்தது. இந்தியாவிலும் இது எதிரொலித்தது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் பிசிகல் கோல்ட் எனப்படும் ஆபரண தங்கத்திற்கான தேவை அதிகரித்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணமாக இருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற குழப்பமான சூழல் நிலவியத்தை அடுத்து பலரும் தங்கத்தில் தான் முதலீடு செய்ய முன்வந்தனர்.

அதே வேளையில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. இப்படி பல்வேறு காரணிகளும் தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணமாக அமைந்துவிட்டன.

சர்வதேச அளவில் டாலர் மதிப்பீட்டில் வைத்து பார்க்கும் போது 39 முறை தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியது என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் 10 மாத காலத்தில் மட்டும் இந்தியாவில் தங்கத்தின் விலை 23.5% என உயர்ந்துள்ளது.

குறிப்பாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தங்கத்தின் விலை அடிக்கடி உச்சத்தை கண்டு இறங்கியது என்கிறது உலக தங்க கவுன்சிலின் அறிக்கை. அக்டோபர் 30ஆம் தேதி சென்னையில் தங்கத்தை விலை 22 கேரட் ஒரு கிராம 7440 ரூபாய் என்றும் ஒரு பவுன் 59520 ரூபாய் என்றும் உச்சம் தொட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+