தாய்லாந்து: பொதுவாக சுற்றுலா என்றவுடன் அனைவரின் எண்ணத்திலும் உதிப்பது தாய்லாந்து தான். ஆனால் தற்போது தாய்லாந்தில் சுற்றுலா என்றில்லாமல் வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தாய்லாந்தில் கொட்டி கிடக்கும் வேலை: 2023 ஏப்ரல் மாத நிலவரத்தின்படி தாய்லாந்தில் 2.3 மில்லியன் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து பதிவு செய்து வேலை செய்வது தெரிய வருகிறது. தாய்லாந்தில் குறிப்பிட்ட சில வேலை வாய்ப்புகள் அந்நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றாலும் தற்போது ஐடி ,சுற்றுலா மற்றும் அக்கவுண்டிங் என பல்வேறு பிரிவுகளிலும் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

வேலைக்கான விசா விண்ணப்பம்: தாய்லாந்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றால் இந்தியர்கள் எளிதாக அங்கே சென்று பணி புரிவதற்காக விசா விண்ணப்பம் செய்யலாம். இதற்காக தாய்லாந்து தூதரகத்தில் "நான் இமிகிரேன்ட் பி விசா" என்ற விசாவிற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
- இந்த விசா வழங்கப்பட்டு விட்டால் அடுத்த மூன்று மாதங்களிலேயே அதனை பயன்படுத்தி விட வேண்டும்.
- இந்த விசாவின் மூலம் ஒருவர் தாய்லாந்து நாட்டிற்கு செல்லும் போது முதல் கட்டமாக 90 நாட்களுக்கு தங்குவதற்கான அனுமதி வழங்கப்படும்.
- இந்த 90 நாட்களுக்குள் தாய்லாந்து வேலை வாய்ப்பு துறையில் வேலைக்கு செல்வதற்கான ஆதாரங்களை வழங்கி தற்காலிக பணி உரிமத்தை பெற வேண்டும்.
- பின்னர் அவர்கள் தங்களுடைய விசாவை அடுத்த ஓராண்டு காலத்திற்கு நீட்டிப்பதற்கு தாய்லாந்து குடியுரிமை துறையிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தாய்லாந்தில் வேலை செய்ய விசா மட்டும் போதுமா?: நான் இமிகிரேன்ட் விசா கேட்டகிரி பி என்பது தாய்லாந்து நாட்டிற்கு வேலை வாய்ப்புக்காகவும் தொழில் தொடங்குவதற்காகவும் வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- ஆனால் இந்த விசா மட்டும் தாய்லாந்தில் வேலை செய்வதற்கு போதுமானது கிடையாது.
- விசா பெற்றுவிட்டு அங்கு சென்று அவர்கள் வேலை செய்வதற்கான உரிமத்தை பெற வேண்டும்.
- தாய்லாந்துக்கு வேலை வாய்ப்புக்கான விசாவில் செல்பவர்கள் வேலைக்கான உரிமம் பெறவில்லை எனில் நாட்டை விட்டே வெளியேற்றப்படுவார்கள்.
எப்படி வேலைவாய்ப்பு உரிமம் பெறுவது?: தங்களுடைய பாஸ்போர்ட், விசா விண்ணப்பம் ,அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் வங்கியில் 50,000 ரூபாயை இருப்பு வைத்திருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
- வேலைக்கு செல்லும் நிறுவனத்திடம் இருந்து அந்த வேலைக்கான ஆஃபர் லெட்டரை பெற்றுக்கொண்டு தாய்லாந்து நாட்டு வேலை வாய்ப்பு துறையில் பதிவு செய்து வேலைக்கான உரிமத்தை பெறலாம்.
- வேலை செய்ய இருக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
மாத்தியோசி.. மில்கி மிஸ்ட்-ன் வியக்க வைக்கும் ஐடியா.. ரூ.20000 கோடி ஈரோடு சாம்ராஜ்ஜியம்..!!
தாய்லாந்து வேலை விசாவுக்கு எவ்வளவு செலவாகும்?: இந்தியாவை சேர்ந்தவர்கள் தாய்லாந்து வேலை விசாவிற்கு விண்ணப்பம் செய்வதற்கு சிங்கள் என்ட்ரி விசாவுக்கு 5000 ரூபாயும், மல்டிபிள் என்ட்ரி விசாவுக்கு 13,000 ரூபாயும் செலவிட வேண்டி இருக்கும்.
- அதே போல வேலைக்கான உரிமத்தை பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு 2000 ரூபாய், ஆறு மாதங்களுக்கு 4000 ரூபாய், ஓராண்டுக்கு 8000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்ய வேண்டும்.
- தாய்லாந்துக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் முதலில் அந்த நாட்டில் 90 நாட்கள் வரை தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த 90 நாட்களுக்குள் அவர்கள் வேலை வாய்ப்புக்கான உரிமத்தை பெற்று விட்டால் அவர்கள் அந்த உரிமம் பெற்றிருக்கக் கூடிய காலம் மூன்றிலிருந்து ஓராண்டுக்குள் இருக்கும் என்பதால் அதுவரை அங்கே இருக்கலாம்.
- மேலும் வெளிநாட்டவர்கள் தாய்லாந்தில் சென்று பணி புரியும் போது ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் அந்நாட்டின் குடியுரிமை துறைக்கு சென்று தங்களுடைய விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்.
- தாய்லாந்தில் வேலை செய்பவர்களின் குடும்பத்தினர் அவரோடு வரவேண்டும் என்றால் நான் இமிகிரேண்ட் ஓ கேட்டகிரி விசா பெற்று 90 நாட்களில் இருந்து ஓராண்டு வரை அவர்களுடன் தங்க முடியும்.
என்னென்ன வேலைகள் செய்ய முடியும்?: தாய்லாந்ந்தில் ஏலம் விடுவது , மர வேலைகள், வைரம் வெட்டி எடுப்பது, தங்க ஆபரணங்கள் செய்வது, தாய் மசாஜ் உள்ளிட்டவற்றை தாய்லாந்து குடிமகன்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதில் வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாது.
- ஆடிட்டிங் மற்றும் சில அக்கவுண்டிங் வேலைகளை குறிப்பிட்ட நிர்பந்தத்திற்கு உட்பட்டு வெளிநாட்டவர்கள் மேற்கொள்ளலாம்.
- வேளாண்மை, மீன் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுமதி தந்து அவர்களுடைய ஸ்பான்சர் ஷிப்பின் பேரில் மட்டுமே வெளிநாட்டவர்கள் செய்ய முடியும்.
ஐடி, சுற்றுலா சார்ந்த சில வேலைகளில் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications