ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மில்கி மிஸ்ட் நிறுவனம் விரைவில் பங்குச் சந்தையில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதற்காக முதலீட்டு வங்கிகளை நியமிக்கும் பணியை இந்நிறுவனம் தொடங்கியுள்ள நிலையில் ஜேஎம் ஃபைனான்சியல் மற்றும் ஐ.ஐ.எஃப். கேபிடல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த மாபெரும் ஐபிஓ-வை வெற்றிகரமாகப் பங்குச்சந்தைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம், 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 கோடி ரூபாய் அளவில் ஐபிஓ மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது மூலம் இந்தியா முழுவதும் உள்ள பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் ஐபிஓ-வாக மாறியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் 2023 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இருந்த மதிப்பீட்டை விட மூன்று மடங்கு அதிகம் மதிப்பீட்டை தற்போது பெற்றுள்ளது தான். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ள மில்கி மிஸ்ட் பிற டெய்ரி நிறுவனங்கள் போல் அல்லாமல் சற்று மாறுபட்டது. ஏன் தெரியுமா..?

மில்கி மிஸ்ட் உருவானது எப்படி: தனது தந்தையின் பால் தொழிலுக்கு உதவப் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர் தான் சதீஷ்குமார். தமிழ்நாட்டில் கல்வி மிகவும் முக்கியம் எனக் கருதும் மக்கள் மத்தியில் கனத்தை இதயத்துடன் பள்ளிப்படிப்பை விடுத்து சதீஷ்குமார் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க களத்தில் இறங்கினார். 1997 ஆம் ஆண்டில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தை சதீஷ்குமார் துவங்கினார்.
தற்போது, இந்த நிறுவனம் ஈரோட்டில் இருந்து மொத்த தென்னிந்தியாவுக்கும் தனது தயாரிப்புகளை சப்ளை செய்கிறார். பால் மட்டும் அல்லாமல் இந்த நிறுவனம் தற்போது 20 க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சரி மில்கி மிஸ்ட் எப்படி மற்ற டெய்ரி நிறுவனங்களைக் காட்டிலும் வித்தியாசமானது..?
கொஞ்சம் ஸ்பெஷல் தான்: தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட முன்னணி பால் நிறுவனமான மில்கி மிஸ்ட், பால் விற்பனையைத் தாண்டி தனித்துவமான வழியில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் பெரும்பாலான பால் நிறுவனங்கள் பால் விற்பனையில் தான் அதிக வருவாய் ஈட்டும் ஆதாரமாகக் கொண்டிருக்கும்.
ஆனால் மில்கி மிஸ்ட் பன்னீர், தயிர், சீஸ் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களில் இருந்து தான் அதிக வருமானத்தையும், வாடிக்கையாளர்களையும் கொண்டு உள்ளது. இதேவேளையில் தமிழ்நாட்டில் அரசு பால் நிறுவனமான ஆவின் மக்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள காரணத்தால் சதீஷ்குமார் வர்த்தகத்தைக் கைப்பற்ற மாற்றி யோசித்து உருவாக்கிய வர்த்தகம் இன்று 20000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மில்கி மிஸ்ட், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 72 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் இருந்து தான் மொத்த வர்த்தகத்தையும் செய்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ.2,500 கோடி அளவுக்கு விற்பனையை எட்டும் என எதிர்பார்க்கப்படும் சதீஷ்குமாரின் மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட உள்ளது.
பால் வர்த்தகத்தை நம்பியிருக்காமல் பன்னீர், தயிர், ஐஸ்கிரீம் போன்ற மாற்று வழியைக் கையாண்டதன் மூலம் மில்கி மிஸ்ட் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டியுள்ளது மட்டுமின்றி, தென்னிந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க வாடிக்கையாளர் தளத்தையும் உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான விநியோகம் மற்றும் வலுவான பிராண்ட் மதிப்பு, மக்கள் மத்தியில் ஒரு முன்னணி பிராண்டாக நிலைநிறுத்தியுள்ளது.
தற்போது மில்கி மிஸ்ட் தென்னிந்தியாவைத் தாண்டி வட இந்திய மாநிலங்களுக்குள் நுழையும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காகத் தனது அடிப்படை கட்டமைப்பையும், சப்ளை செயினையும் விரிவாக்கம் செய்யும் பணியில் உள்ளது. இதனால் இதன் வளர்ச்சி வாய்ப்பு என்பது மிகவும் பிரகாசமாக உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications