பலரும் தீபாவளி பண்டிகையையொட்டி தங்க நகைகளை வாங்க திட்டமிட்டு கொண்டிருப்பார்கள். தீபாவளி கொண்டாட்டங்களின் போது தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. தங்கம் செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை தருவதாகவும் கருத்துகள் நிலவுகிறது. தற்போது தங்கம் விலை 10 கிராம் 77,000-த்தை தாண்டியுள்ளது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக வரும் ஆண்டுகளிலும் தங்கம் விலை புதிய உச்சத்தை காணக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
தங்க நகையை நீங்கள் வாங்கும் போது நகைக்கடைக்காரர் எப்படி தொகையை கணக்கிடுகிறார் என்று கவனித்ததுண்டா? தங்க நகைகளை வாங்குவதற்கு நீங்கள் செலுத்தும் விலை பல்வேறு விஷயங்களுக்காக ஒதுக்கப்படுகிறது. நகைக்கடைக்காரர்கள் தங்கத்திற்கு ஒரே மாதிரியான விலையை வசூலிப்பதில்லை.

தங்கத்தின் விலை ஒரு நகைக்கடையில் இருந்து இன்னொரு நகைக்கடையில் வேறு மாதிரியாக இருக்கும். தங்கத்தை வெவ்வேறு நகைக் கடைக்காரர்கள், வெவ்வேறு இடத்திலிருந்து வெவ்வேறு விலையில் வாங்குவதும் இதற்கு ஒரு காரணம். பின்னர் சுத்திகரிப்பு, போக்குவரத்து செலவுகள், பிற செலவுகள் ஆகியவற்றையும் சேர்த்து தான் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் தூய்மையில் உள்ள வேறுபாடுகளாலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படலாம்.
தங்கம் தங்க விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?: தங்க விலையை கணக்கிட கீழ்காணும் ஃபார்முலாவை தான் நகைக்கடைக்காரர்கள் பயன்படுத்துகின்றனர்.
தங்க நகைகளின் இறுதி விலை = {தங்கத்தின் விலை X (கிராமில் எடை)} + மேக்கிங் கட்டணங்கள் + GST இல் 3%+ ஹால்மார்க்கிங் கட்டணங்கள்
இந்த பார்முலாவை பயன்படுத்தி ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். பொதுவாக 22 கேரட்டில் மட்டும்தான் தங்க நகைகளை செய்ய முடியும். ஏனெனில் 24 கேரட் தங்கம் தூய்மையானது. இது மிகவும் மென்மையாக இருக்கும் காரணத்தினால் அதை வளைத்து, முறுக்கி தங்க நகைகளை செய்ய முடியாது. நீங்கள் 15.76 கிராம் எடை கொண்ட 22 கேரட் தங்க வளையலை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 22 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை 70,000 ரூபாய். இதற்கு மேக்கிங் சார்ஜஸ் 15 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம்.
தற்போது 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,000 ரூபாய் என்றால் 15.76 கிராம் தங்க வளையல் வாங்குவதற்கு ரூ.1,10,320 தேவைப்படும். இதற்கு 15 சதவீதம் மேக்கிங் சார்ஜஸ் விதிக்கப்பட்டால் அதற்கு 16,548 ரூபாய் கூடுதல் செலவாகும். அப்படியானால் மேக்கிங் சார்ஜஸ் மற்றும் தங்கத்தின் விலையை சேர்த்து 1,26,868 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.
தங்க வளையல் மீதான ஜிஎஸ்டியை கணக்கிட்ட பிறகு ஜிஎஸ்டி மட்டும் 3,806 ரூபாயாக இருக்கும். ஹால்மார்க்கிங் கட்டணமாக ரூ.45 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஒட்டுமொத்த விலையையும் கணக்கிட்ட பிறகு தங்க வளையலின் இறுதி விலை ரூ. 1,30,719 ரூபாயாக இருக்கும்.
தங்கம் விலை நிர்ணயம் அதன் தூய்மையை பொறுத்தது: தங்க நகைகளை வாங்கும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பிற விஷயங்களும் உள்ளன. தங்கம் விலை பொதுவாக அதன் தூய்மையை பொறுத்தது. சந்தையில் 24 கேரட், 23 கேரட், 22 கேரட், 18 கேரட் மற்றும் 14 கேரட் ஆகிய நிலைகளில் தங்கம் கிடைக்கிறது.
இந்த ஒவ்வொரு கேரட் மதிப்பீடும் எவ்வளவு சதவீதம் தங்கம் இருக்கிறது என்பதை குறிக்கிறது தங்கத்தின் விலைக்கும் தங்கத்தின் தூய்மைக்கும் நேரடி தொடர்பு உண்டு. அதாவது தங்கத்தின் தூய்மை உயரும்போது விலையும் உயரும். 24 கேரட் தங்கம் மிகவும் விலை உயர்ந்தது. ஆனால் இது மிகவும் மென்மையாக இருக்கும் காரணத்தினால் இதை வைத்து தங்க நகைகளை வாங்க முடியாது. தங்க நாணயங்கள் போன்றவற்றை வாங்கலாம். மறுபுறம் 23 கேரட், 22 கேரட், 20 கேரட், 18 கேரட் மற்றும் 14 கேரட் போன்ற தங்க நகைகளை வாங்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications