இந்திய பொருளாதாரம் ஒரு மாபெரும் பொருளாதார பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டது என்பதற்கு, ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2026-ன் (Hurun Global Rich List 2026) சமீபத்திய அறிக்கையே சாட்சி. உலகத்தையே திகைக்க வைக்கும் வகையில், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் இந்தியாவில் 57 புதிய பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் பில்லியனர் எண்ணிக்கை 308-ஆக உயர்ந்து, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
பழமையான வணிகக் குடும்பங்களின் ஆதிக்கத்தை தாண்டி, தொழில்நுட்பம், எரிசக்தி, ஹெல்த்கேர், ஆட்டோமொபைல் துறை மற்றும் நிதிச் சேவைகள் என புதிய துறைகளில் இருந்து பில்லியனர்கள் உதயமாவது, இந்திய பொருளாதாரத்தின் புதிய பரிமாணத்தை காட்டுகிறது. இந்த வேகமான வளர்ச்சியில், பல பெரும் தொழில்முனைவோர்கள் கோடிக்கணக்கான செல்வத்தை ஈட்டியிருந்தாலும், ஒட்டுமொத்த ஆசியாவின் செல்வ சிகரத்தில் யார் அமர்ந்திருக்கிறார் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தான். 9.8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவிலும், ஆசியாவிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். முகேஷ் அம்பானியை தொடர்ந்துள்ள அந்த பில்லியனர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்? புதிய பில்லியனர்கள் யார்? வாருங்கள் பார்க்கலாம்.

இந்திய பில்லியனர்களில் அதிகபட்சமாக 95 பில்லியனர்கள் மும்பையில் வசிக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் 15 புதிய பில்லியனர்கள் மும்பையில் உருவாகியுள்ளனர்.
இந்தியாவில் டாப் 5 பணக்காரர்களின் லிஸ்டில் 9.8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அதானி குழுமத்தின் கெளதம் அதானி 7.5 லட்சம் கோடி ரூபாயுடன் உள்ளார். அடுத்து ஹெச்சிஎல்-ன் ரோஷ்னி நாடார் 3.2 லட்சம் கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும், சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனவல்லா 3 லட்சம் கோடி ரூபாயுடன் 4வது இடத்திலும், 5வது இடத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா 2.5 லட்சம் கோடி ரூபாயுடனும் உள்ளார்.
ஐபோன் வாங்க EMI சிறந்ததா? மிடில் கிளாஸ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கணக்கீடு இதோ!
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இளம் பில்லியனராக ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் (32 வயது), சுமார் 14,440 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவின் இளம் பில்லியனராக உருவெடுத்துள்ளார். அதேபோல் துறை வாரியான வளர்ச்சியை பார்க்கும்போது இந்த ஆண்டு அதிகப்படியான புதிய பில்லியனர்கள் சுகாதாரத் துறையில் இருந்து உருவாகியுள்ளனர் (53 பேர்). அதைத்தொடர்ந்து தொழில்முறை பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறையில் உள்ளனர். இந்தியாவின் டாப் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே பெண்மணி ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஆவார்.


Click it and Unblock the Notifications