சென்னை: இந்தியாவின் தொழில்துறையில் மார்வாடி சமூகத்தின் பங்களிப்பு பெரியது. இருப்பினும் தற்போது இந்திய வர்த்தகத்தில் மார்வாடிகளின் ஆதிக்கம் குறைவாக உள்ளது. இதனால் மார்வாடிகள் தங்களது செல்வத்தை உருவாக்கும் ஆற்றலை இழந்து விட்டார்கள் என்ற எண்ணம் சிலர் மத்தியில் உள்ளது. ஆனால் உண்மை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே மார்வாடிகள் வர்த்தகத்தில் கொடி கட்டி பறந்தனர். 1947க்கு பிறகும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

தொழில்முனைவோர், செலவுகள் பற்றிய அவர்களின் ஆழ்ந்த புரிதல் மற்றும் நிதி மேலாண்மை உணர்வு உள்ளிட்டவை சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் தொழில்துறையிலும் நிதிச் சேவை துறையிலும் அவர்களின் எழுச்சிக்கான களத்தை அமைத்தது. (1990கள்) தாராளமயமாக்கல் வரை மார்வாடிகள் வர்த்தகத்தில் ஆதிக்கத்தை செலுத்தினர்.
வணிக ஈர்ப்பு: தங்களுக்கு இயற்கையான செல்வாக்கு மற்றும் வசதியை அளித்த தொழில்கள் மற்றும் வணிகங்கள் மீது மட்டுமே அவர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. இதனால் தாராளமயமாக்கல் வாயிலான வாய்ப்புகளை பயன்படுத்த தவறி விட்டனர். மார்வாடிகளின் கற்றலும் அவர்களது நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில் மட்டுமே இருந்தது. மார்வாடி சமூகத்தை சேர்ந்த இளைஞர்களும் உயர்படிப்புகளுக்கு வணிகம் அல்லது சி.ஏ.வை தேர்வு செய்தார்கள். குறிப்பிட்ட தொழிலை மட்டுமே செய்வோம் என்ற இந்த ஒற்றை மனப்பான்மை அவர்களை புதிய துறைகளுக்கு குறிப்பாக தொழில்நுட்பம் துறை மீது பார்வையை விரிவுபடுத்த அனுமதிக்கவில்லை. இது அவர்களுக்கு மைனஸாக அமைந்தது.
அரசு நிர்வாகம்: மேலும், அரசு மற்றும் அதிகாரத்துவத்தை நிர்வகிப்பதில், கொள்கை கட்டமைப்பை மாற்றுவதில் மார்வாடிகளுக்கு திறமை குறைவு. மார்வாடிகளின் மந்தநிலைக்கு மற்றொரு காரணம் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான உந்துதல் இல்லாதது. மேலும் மார்வாடி சமூகம் வலுவான கூட்டு குடும்ப அமைப்பை கொண்டது. வீட்டின் தலைவரை மீறி இளம் உறுப்பினர்கள் சுயமாக தொழிலை விரிவுபடுத்துதல் மற்றும் புதுமைப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியாது. மார்வாடிகளின் மனநிலை அவர்களின் பெண்களை வணிகத்தில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தவில்லை. இருப்பினும் வெல்ஸ்பனின், திபாலி கோயங்கா அல்லது வினாதி ஆர்கானிக்ஸின், வினாதி சரஃப் முதரேஜா போன்ற சில பெண்கள் விதிவிலக்காக உள்ளனர்.
மார்வாடிகள் கோலோச்சும் கம்பெனிகள்: இன்று இந்தியாவின் முக்கிய தொழில்துறைகளில் மார்வாடிகளின் இருப்பு குறைவாக உள்ளது. எஃப்.எம்.எம்.ஜி. துறையில் இமாமி குழுமம் மற்றும் வருண் பேவரேஜ் ஆகிய 2 மார்வாடிகள் நிறுவனங்கள் உள்ளன. மருந்து துறையில் லுப்பின் மட்டுமே பெரிய மார்வாடி நிறுவனமாக உள்ளது. 2000ம் ஆண்டுகளில் இந்தியாவின் எழுச்சி துறையான தொலைத்தொடர்பில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் மட்டுமே இருந்தது. வாகன துறையில் உள்ள ஒரே மார்வாடி பஜாஜ் மட்டுமே. ரியல் எஸ்டேட்டில் லோதாஸ் குறிப்பிடத்தக்க மார்வாடி. உலோகத்துறையில் ஜிண்டால்ஸ், பிர்லாஸ் மற்றும் அனில் அகர்வாலின் வேதாந்தா ஆகிய மார்வாடி நிறுவனங்கள் கிட்டத்தட்ட மொத்த ஆதிக்கத்தை கொண்டுள்ளன. சிமெண்ட் வர்த்தகத்தில் பிர்லாஸ், பாங்கர்ஸ், டால்மியாஸ் மற்றும் சிங்கானியாஸ் ஆகிய மார்வாடிகள் உள்ளனர்.
இளம் தலைமுறை: தற்போது உயர்தர கல்வி, உலகளாவிய மேலாண்மை நுட்பங்களை காண்பித்தல் மற்றும் சிறந்த கார்ப்பரேட் நிர்வாகம் ஆகியவை அடுத்த தலைமுறை மார்வாடிகள் மத்தியில் வெற்றிக்கான புதிய பசியை மீண்டும் தூண்டி விட்டன. நாட்டின் துடிப்பான ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பு சச்சின் மற்றும் பின்னி பன்சால் (முன்னாள் பிளிப்கார்ட்), ரித்தேஷ் அகர்வால் (ஓயோ), பிரதீக் மகேஸ்வரி (பிசிக்ஸ வல்லாஹ்), அனுபம் மிட்டல் (சாதி டாட் காம்), முகேஷ் பன்சால் (மைந்த்ரா) மற்றும் ஹர்ஷ் ஜெயின் (ட்ரீம் 11) போன்றவர்கள் அடுத்த தலைமுறை மார்வாடி தொழில்முனைவோர்களின் புது சிந்தனைகளுக்கு சில உதாரணங்களாகும்.
1964ல் நாட்டின் சிறந்த 10 வர்த்தக நிறுவனங்கள் பட்டியலில் 13 மார்வாடி குடும்பங்கள் இருந்தன. இது 1990ல் 14ஆக உயர்ந்தது. 2020ம் ஆண்டிலும் நாட்டின் சிறந்த 10 வர்த்தக நிறுவனங்கள் பட்டியலில் மார்வாடி நிறுவனங்களின் எண்ணிக்கை 14ஆக இருந்தது. 2013ல் போர்ப்ஸ் வெளியிட்ட டாப் 100 இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 29 மார்வாடிகள் இடம் பெற்று இருந்தனர். ஆனால் 2022ல் போர்ப்ஸின் பட்டியலில் மார்வாடிகளின் எண்ணிக்கை 26ஆக குறைந்தது. அதேசமயம் இதே காலத்தில் டாப் 10 பணக்காரர்களில் பட்டியலில் மார்வாடிகளின் எண்ணிக்கை 2லிருந்து 4ஆக உயர்ந்தது. இந்த புள்ளிவிவரங்கள் மார்வாடிகள் சமூகம் செல்வத்தை உருவாக்குபவர்களில் ஒருவராக இருப்பதை வெளிப்படுத்துகின்றன. மேலும், மார்வாடிகள் செல்வத்தை உருவாக்கும் ஆற்றலை இழந்துவிட்டார்கள் என்ற பேச்சுக்களில் உண்மையில்லை என்பதையும் காட்டுகின்றன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications