டெல்லி: தங்கம் நமது வாழ்க்கை முறையில் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கக்கூடிய ஒரு உலோகம். தங்கத்தை நகைகளாகவோ அல்லது காயின்களாகவோ அவ்வப்போது வாங்கி சேர்த்து வைக்கும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது.
வீட்டில் ஒரு நல்ல விசேஷம் வரும்போது அல்லது பண்டிகை நாட்களில் நியாபகார்த்தமாக தங்கம் வாங்கி வைப்பவர்கள் அதிகம். அதே போல நமது கொண்டாட்டங்களிலும் தனிப்பட்ட வீட்டு நிகழ்வுகளிலும் தங்க நகைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன.

இந்நிலையில் ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைக்கலாம் இதற்கென ஒரு வரம்பு உள்ளதா ,இதற்கு வருமான வரி கணக்கை காட்ட வேண்டுமா என பல்வேறு சந்தேகங்கள் எழக்கூடும். அதற்கு இந்த கட்டுரையில் நாம் விடை காணலாம்.
தங்கத்தை நகைகள், காயின்கள், பார்கள் ஆகிய பிசிக்கல் முறையிலும், தங்கப் பத்திரம் , ஈடிஎஃப் என டிஜிட்டல் முறையிலும் நாம் வாங்க முடியும். இருப்பினும் இதில் பெரும்பாலானவர்கள் நகைகள் மற்றும் காயின்களையே வாங்குவார்கள். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையின் படி, இந்தியாவில் ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்:
1.திருமணமாகாத பெண் 250 கிராம் வரை தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம்
2. திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம்
3. திருமணமாகாத மற்றும் திருமணமான ஆண் 100 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்க முடியும்.
ஒரு வீட்டில் எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள் இருக்கின்றனரோ அதற்கு ஏற்ப கிராம்களை பிரித்து கொண்டு கணக்கு காட்டலாம். மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறுவது என்னவென்றால் இத்தனை கிராம் வரை நகைகள் வைத்திருந்தால் அதற்கு எந்த ஒரு வருமான கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
பொதுவாக வருமான வரித்துறை ஒவ்வொரு வீடாக சென்று எவ்வளவு நகை இருக்கிறது என ஆய்வு செய்யப் போவதில்லை. ஆனால் ஒருவேளை வருமான வரி சோதனை நடைபெறுகிறது அப்போது குறிப்பிட்ட வரம்பை மீறி தங்கம் இருந்தால் அதற்கான வருமானம் எப்படி கிடைத்தது என்ற கணக்கை தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் வருமான வரி துறை அதனை பறிமுதல் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிகளின்படி விவசாய வருமானம், பரம்பரை பணம், ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் ஆகியவற்றுக்கு எந்த வரியும் கிடையாது. ஆனால் இந்த வரம்புக்கு மீறிய தங்கத்தை நாம் வீட்டில் வைத்திருக்கும் போது அதற்கு கணக்கு காட்டியாக வேண்டும்.
அதே வேளையில் தங்கம் வாங்கிய மூன்று ஆன்டுகளுக்குள் விற்கப்பட்டால் அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரியை அரசாங்கம் விதிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்யும் போது அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications