இந்திய மக்களிடையே தங்கத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. திருமணங்கள், வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள் என அனைத்திற்கும் தங்க நகைகள் தேவைப்படுகிறது. அதோடு முக்கிய முதலீடாகவும் சிலர் தங்கத்தை வாங்குகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் அன்பை சொல்லி மாளாது. ஏறக்குறைய இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் கடுகளவாவது தங்கத்தை வைத்திருக்கிறது. தங்கத்தின் மீதான இந்த மோகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அப்படி சிலர் அதிக அளவில் தங்க நகைகளை வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் வீட்டில் எவ்வளவு தங்கம் இருக்க வேண்டும் என்பதற்கும் வரம்புகள் உள்ளன.
இதற்கு இணங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் தங்கத்தை வாங்குவது மற்றும் சேமிப்பதற்கு அரசாங்கம் விதிகளை நிறுவியுள்ளது. இந்த விதிமுறைகளின் படி திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்க முடியும்.

வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்?: மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கூற்றுப்படி வீட்டில் குறிப்பிட்ட அளவு மட்டுமே தங்கத்தை வைத்திருக்க முடியும். அதேபோல உங்களிடம் எவ்வளவு தங்கம் இருந்தாலும் அது எப்படி வந்தது என்பதற்கான ஆதாரம் கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும்.
பெண்கள் தங்களிடம் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க முடியும்?: திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம் என்று வருமான வரிச் சட்டம் கூறுகிறது. திருமணம் ஆகாத பெண் 250 கிராம் வரையிலான தங்கத்தை வைத்திருக்கலாம். அதேபோல குடும்பத்தில் உள்ள ஆண்கள் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வைத்திருக்க முடியும்.
பரம்பரை தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறதா?: வரி விலக்கு வழங்கப்பட்ட தொழிலில் இருந்து வருமானம்.. அதாவது விவசாயம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற விஷயங்களில் இருந்து தங்கம் வாங்கி இருந்தால் அல்லது சட்டப்பூர்வ மரபுரிமையின் மூலம் தங்கம் வாங்கி இருந்தால் அதற்கு வரி கிடையாது.
தங்கத்தை வைத்திருப்பதற்கு வரி உண்டா?: தங்கத்தை வைத்திருக்க வரி இல்லை என்றாலும் தங்கத்தை விற்றால் அதற்கு வரி செலுத்தியாக வேண்டும்.
3 வருடங்களுக்குப் பிறகு தங்கத்தை விற்பனை செய்தால் எவ்வளவு வரி விதிக்கப்படும்?: தங்கத்தை வாங்கிய பின்பு 3 வருடங்கள் கழித்து விற்பனை செய்தால், அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரி (LTCG) விதிக்கப்படுகிறது.
தங்கப் பத்திரங்களை விற்பதற்கு எவ்வளவு வரி?: தங்க பத்திரத்தை வாங்கிய 3 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்தால் அது விற்பனையாளரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு வரிவிதிப்பு விதிமுறைகளின் படி வரி விதிக்கப்படும். அதுவே தங்க பத்திரத்தை முதிர்வு வரை வைத்திருந்து விற்பனை செய்தால் எந்தவித வரியும் இல்லை.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications