சென்னை: இந்தியாவுடன் ஒப்பிடும்போது துபாயில் தங்கத்தின் விலை குறைவானதாக இருக்கிறது. எனவே தான் துபாய் செல்லக்கூடிய இந்தியர்கள் அங்கிருந்து தங்கத்தை வாங்கி வருவார்கள். ஆனால் துபாயில் தங்கம் விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக நாம் நினைத்த அளவுக்கு எல்லாம் தங்கத்தை வாங்கி விட முடியாது.
ஏனெனில் அதனை இந்தியாவிற்கு கொண்டு வரும்போது சுங்கவரி செலுத்த வேண்டி இருக்கும். அந்த வகையில் துபாயில் இருந்து வரக்கூடிய இந்தியர்கள் எவ்வளவு தங்கத்தை எந்த வரியும் செலுத்தாமல் கொண்டு வர முடியும் என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

துபாயில் தங்கத்தை வாங்குபவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அதாவது தங்கம் வாங்கியதற்கான ரசீது, தங்கத்தின் தரம் மற்றும் தூய்மை தன்மைக்கான சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தங்க நகை, தங்க கட்டி , நாணயம் ஆகிய அனைத்துக்கும் இது பொருந்தும்.
தங்க நாணயங்களை பொருத்தவரை துபாயில் இருந்து வாங்கி வரக்கூடிய மொத்த தங்க நாணயத்தின் எடை 20 கிராமிலிருந்து 100 கிராமுக்குள் இருக்கும் போது 10% சுங்கவரி செலுத்தியாக வேண்டும். ஒருவேளை நீங்கள் 20 கிராமுக்கும் குறைவான தங்க நாணயங்களை கொண்டு வருகிறீர்கள் என்றால் அதற்கு எந்த ஒரு வரியும் செலுத்த வேண்டியது கிடையாது.
ஒரு குழந்தை 40-லிருந்து 100 கிராமுக்குள் தங்கத்தை கொண்டு வந்தால் 3% சுங்க வரி செலுத்த வேண்டும். ஒருவேளை அந்த தங்கத்தின் எடை 100 முதல் 200 கிராமுக்குள் இருந்தால் 6 % சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். 200 கிராமுக்கு மேல் குழந்தையின் பெயரில் தங்கத்தை கொண்டு வருகிறீர்கள் என்றால் 10% சுங்க கட்டணம் செலுத்தியாக வேண்டும். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 40 கிராமுக்கு கீழ் இருக்கும் தங்க நகைகளை எந்த ஒரு வரியும் இல்லாமல் கொண்டுவர முடியும்.
ஒரு பெண் துபாயில் இருந்து இந்தியா வருகிறார் என்றால் 40 முதல் 100 கிராம் வரையிலான தங்கத்திற்கு 3% சுங்க வரியும் 100 முதல் 200 கிராம் வரையிலான தங்கத்திற்கு 6% வரியும் செலுத்த வேண்டும். 200 கிராமுக்கு மேல் தங்கத்தை வாங்கி வந்தால் 10% வரி செலுத்த வேண்டும். பெண் ஒருவர் 40 கிராமுக்குள் கீழ் வரை கொண்டு வரும் தங்கத்திற்கு எந்த வரியின் செலுத்த வேண்டியதில்லை. இந்த தங்கத்தை நகையாகவோ அல்லது கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ கொண்டு வரலாம்.
ஒரு ஆண், 20 முதல் 50 கிராம் வரையிலான தங்கத்திற்கு 3% வரியும் 50 முதல் 100 கிராம் வரையிலான தங்கத்திற்கு 6% வரியும் செலுத்த வேண்டும். 100 கிராமுக்கு மேல் தங்கம் வாங்கி கொண்டு வந்தால் 10% வரி செலுத்தி ஆக வேண்டும் 20 கிராமுக்கும் கீழ் தங்கத்தை கொண்டு வரும் ஆண்களுக்கு எந்த ஒரு சுங்க வரியும் கிடையாது. பொதுவாக சுங்கவரி இல்லாத அளவீடு வரையிலான தங்கம் கழிக்கப்பட்டு மீதமுள்ள தங்கத்திற்கு தான் வரி விதிக்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!



Click it and Unblock the Notifications