சென்னை: இந்தியாவில் நமது கொண்டாட்டங்களிலும் தனிப்பட்ட நிகழ்வுகளிலும் தங்கம் முக்கிய இடம் பிடிக்கிறது. தங்க நகை அல்லது காயின்கள் ஆகியவற்றை நாம் வாங்கிவிடுகிறோம். ஏனெனில் இது ஒரு பாதுகாப்பான முதலீடும் கூட. அந்த வகையில் ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்து கொள்ளலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தங்க நகைகள் மற்றும் தங்கம் சார்ந்த பொருட்களை நாம் சம்பாதித்து வாங்குகிறோம் அல்லது பரம்பரை பரம்பரையாக நமக்கு அது பரிமாற்றம் செய்யப்படுகிறது. இப்படி அவரவர் வசதிக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கிறோம். மத்திய அரசின் விதிகளின் படி, இந்தியாவில் ஒருவர் எவ்வளவு தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கலாம்:

திருமணமாகாத ஒரு பெண் 250 கிராம் வரையிலான தங்கத்தை சொந்தமாக வீட்டில் வைத்திருக்கலாம்
திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம்
திருமணமாகாத மற்றும் திருமணமான ஆண் 100 கிராம் வரை தங்கத்தை சொந்தமான வைத்திருக்க முடியும்
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரம்பிற்குள் தங்கம் வைத்திருந்தால் அதற்கு எந்த ஒரு வருமான கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராம்களில் நகைகளை பிரித்து கணக்கு காட்டலாம்.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிகளின்படி விவசாய வருமானம், பரம்பரை நகை, அரசிடம் தெரிவிக்கப்பட்ட வருமானம் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தங்கத்திற்கு எந்த வரியும் கிடையாது. ஆனால் வரம்புக்கு மீறிய தங்கத்தை நாம் வீட்டில் வைத்திருக்கும் போது அதற்கு ஆதாரத்தை காட்டியாக வேண்டும்.
அதாவது உங்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது அப்போது குறிப்பிட்ட வரம்பை மீறி உங்களிடம் தங்கம் இருப்பது தெரிய வந்தால் அதற்கான வருமானம் எப்படி கிடைத்தது என்ற கணக்கை தெரிவிக்க வேண்டும், இல்லையெனில் வருமான வரி துறை அதனை பறிமுதல் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
தங்கத்தை வைத்திருப்பதற்கு அரசு வரி விதிப்பது இல்லை ஆனால் ஆனால் தங்கம் விற்கும் போது வரி விதிக்கப்படுகிறது. தங்கம் வாங்கிய மூன்று ஆன்டுகளுக்கு பின் விற்கப்பட்டால் அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டும். தற்போது அதன் விகிதம் 20 % ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications