வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வர ஆசையா? சுங்கத்துறையிடம் சிக்காமல் இருக்க என்ன வழி?

வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக துபாய், சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வரும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க எத்தனை கிராம் தங்கம் வரை வரி இல்லாமல் கொண்டு வரலாம் என்பது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், விதிகள் தெரியாமல் பலர் அபராதம் செலுத்துவதும், தங்கத்தை இழப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

வரி விலக்கு வரம்பு என்ன..?: சுங்கத் துறையின் விதிகளின்படி, தங்கம் கொண்டு வருவதில் ஆண் மற்றும் பெண் பயணிகளுக்கு என்று தனித்தனி விலக்குகள் உள்ளன. அந்த வகையில், ஆண் பயணிகளை பொறுத்தவரை வரி இல்லாமல் அதிகபட்சமாக 20 கிராம் தங்கம் வரை கொண்டு வரலாம். அதன் மொத்த மதிப்பு ரூ.50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வர ஆசையா? சுங்கத்துறையிடம் சிக்காமல் இருக்க என்ன வழி?

அதேபோல், பெண்களுக்கு சற்று அதிக விலக்கு உண்டு. ஒரு பெண் பயணி, வரி இல்லாமல் அதிகபட்சமாக 40 கிராம் தங்கம் மற்றும் நகைகள் வரை கொண்டு வரலாம். அதன் மொத்த மதிப்பு ரூ.1,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இந்த வரி விலக்கு, அணியக் கூடிய நகைகளுக்கு மட்டுமே பொருந்தும். தங்கக் கட்டிகள் (Gold Bars), தங்க நாணயங்கள் அல்லது பிஸ்கட்கள் ஆகியவற்றுக்கு இந்த விலக்கு கிடையாது என்றும் விளக்கப்பட்டுள்ளது.

NRI-களுக்கான தனி விதிகள் : நீங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கி இருந்து, இப்போது இந்தியா திரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்குச் சலுகை உள்ளது. நீங்கள் 1 கிலோ தங்கம் வரை இந்தியாவுக்குக் கொண்டு வரலாம். ஆனால், இதற்குச் சுங்க வரி செலுத்த வேண்டியது கட்டாயம். வரியின் அளவு பொதுவாக 10% முதல் 15% வரை மாறும். எனவே, NRI-கள் அதிகத் தங்கம் கொண்டு வர திட்டமிட்டால், விமான நிலையத்திலேயே சுங்கக் கவுண்டரில் அதைத் தெரியப்படுத்தி, வரியைச் செலுத்திவிடுவது நல்லது.

தங்கக் கட்டிகளுக்கு வரி விலக்கு இல்லை : பலருக்கும் இருக்கும் பெரிய குழப்பம் இதுதான். "20 கிராம் வரை இலவசம்" என்று நினைத்து, தங்கக் கட்டிகள் அல்லது நாணயங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கு எந்த விதமான வரி விலக்கும் கிடையாது. இத்தகைய தங்கத்தை கொண்டு வரும்போது, சுங்க அதிகாரிகள் அதைப் பறிமுதல் செய்யக் கூடும், வரி மட்டுமின்றி அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

பிடிபட்டால் என்ன ஆகும்..?: அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக தங்கம் கொண்டு வந்து, அதைப் பற்றிச் சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறினால், சிக்கல் நிச்சயம். விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது, அதிக அபராதம் விதிக்கப்பட்டது ஏன், சில சமயங்களில் சட்டப்பூர்வமான வழக்குகள் கூடப் பதிவு செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. ஸ்கேனர் முதல் சோதனை வரை அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதால், தங்கத்தை மறைக்க முயற்சிப்பது ஆபத்தான விஷயமாகும்.

சிக்கலை தவிர்க்க எளிய வழிகள் :நீங்கள் வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வரும்போது சில ஆவணங்களைக் கட்டாயம் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அதாவது, தங்கம் வாங்கியதற்கான ரசீது, தங்கத்தின் தூய்மைச் சான்றிதழ் (Purity Certificate), பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்புச் சான்று (NRI என்றால்) ஆகியவை உங்கள் தங்கத்தை நிரூபிக்க உதவியாக இருக்கும்.

சட்ட சிக்கல்கள் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், தங்கம் அனுமதி வரம்புக்குள் இருந்தால், ரசீதை வைத்துக் கொள்ளுங்கள். வரம்பை மீறி இருந்தால், நேராக சுங்கக் கவுண்டருக்கு சென்று அதைத் தெரிவித்து வரியைச் செலுத்திவிடுங்கள். இப்படிச் செய்தால், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உங்கள் தங்கத்தை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வரலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+