சர்வதேச காரணிகள் காரணமாக உலக அளவில் தங்கத்தின் விலை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கிறது. அமெரிக்கா டாலரின் மதிப்பு குறைவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிடக்கூடிய வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்புகள் ,பல்வேறு நாடுகளின் வங்கிகளும் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி வைப்பது என பல்வேறு காரணிகளும் தங்கத்தின் விலையை உயர்த்துவதாகவே அமைந்திருக்கின்றன.
10 ஆண்டுகளில் தங்கம் விலை: பாதுகாப்பான ஒரு முதலீடாக தங்கம் ஏன் கருதப்படுகிறது என்பதை நாம் தரவுகளோடு சர்வதேச தங்கம் விலை நிலவரத்தோடு தற்போது பார்க்கலாம். சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2000ஆம் ஆண்டு 200 டாலர்களாக தான் இருந்தது. இது 2005ஆம் ஆண்டு 377 டாலர்கள், 2015இல் 1,057 டாலர்கள், 2020இல் 1,777 டாலர்கள், 2025ல் 3,330 டாலர்கள் என உயர்ந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தங்கம் ஆண்டுக்கு 12.16 சதவீதம் என்ற காம்பவுண்டிங் விதத்தில் முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்துள்ளது. அதாவது பத்து ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு இருநூறு சதவீதம் உயர்ந்திருக்கிறது. பைனான்சியல் எக்ஸ்பிரஸில் வெளியாகி இருக்கும் தங்கம் விலை தொடர்பான வரைபடம் இதனை தெளிவாக குறிப்பிடுகிறது.

200% லாபம்: 2015இல் தங்கத்தில் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 3 லட்சத்தை கடந்திருக்கும். தங்கம் சில சமயங்களில் தேக்க நிலைக்கு சென்றுவிடலாம் ஆனால் அதன் விலை உயர ஆரம்பித்தால் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
காம்பவுண்டிங் லாபம்: கடந்த 25 ஆண்டுகளில் தங்கம் ஆண்டுக்கு 11.91% என்ற விகிதத்தில் லாபம் தந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 12.15 % என்றும், 5 ஆண்டுகளில் 13.38 % என்றும் லாபம் தந்துள்ளது.2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மட்டும் தங்கத்தின் விலை 27 சதவீதம் உயர்ந்திருக்கிறது, கடந்த 12 மாதங்களில் 40% அதிகரித்து இருக்கிறது என தரவுகள் கூறுகின்றன.
இனியும் தங்கம் விலை உயருமா?: அமெரிக்காவை சேர்ந்த பேங்க் ஆப் அமெரிக்கா அண்மையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,000 டாலர் வரை எட்ட கூடும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே அது நடக்கும் என்று கூறியது. கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனமும் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் 2025 ஆம் ஆண்டு இறுதியில் 4,500 டாலர்கள் வரை எட்டலாம் என தெரிவித்திருந்தது . தற்போதைய சர்வதேச போக்குகளே தங்கத்தின் விலையை தீர்மானிக்க இருக்கின்றன. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் தங்கம் விலை இப்படி நீடிக்குமா அல்லது மேலும் உயருமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்க போகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications