துபாயிலிருந்து சுங்க வரி இல்லாமல் எவ்வளவு தங்க நகைகளைக் கொண்டு வர முடியும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது விழாக்காலம் என்பதால் போனஸ் பெரும்பாலான நபர்கள் தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்கள், தங்க நகை வாங்குவது அல்லது முதலீடு செய்வதில் கவனம் செலுத்துவார்கள்.

அதனை பயன்படுத்திக்கொள்ள பல்வேறு ஆஃபர்களும் இந்த விழாக்காலங்களில் அறிவிக்கப்படும்.

சிலர் தங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் துபாயில் இருக்கும் போது அங்கிருந்து தங்க நகைகள் அல்லது விலை உயர்ந்த போன்கள் போன்றவற்றை வாங்கி வரச் சொல்வார்கள். ஆனால் துபாயிலிருந்து குறிப்பிட்ட அளவிற்கு தங்கம் வாங்கி வரும் போது அதற்கு வரி செலுத்த வேண்டாம்.

 7 மாத சரிவில் தங்கம் விலை.. தங்க நகை வாங்குவோருக்கு நல்ல சான்ஸ்..! 7 மாத சரிவில் தங்கம் விலை.. தங்க நகை வாங்குவோருக்கு நல்ல சான்ஸ்..!

தெரிந்துகொள்ளுங்கள்

தெரிந்துகொள்ளுங்கள்

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் துபாயிலிருந்தால் அங்கு இருந்து தங்க நகைகள் வாங்கி வரும் போது வரி இல்லாமல் எவ்வளவு தங்கம் வாங்கி வரலாம் என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

துபாய் தங்கம் நகை விலை

துபாய் தங்கம் நகை விலை

இந்தியாவுடன் ஒப்பிடும் போது துபாயில் தங்க நகை விலை குறைவாகவே கிடைக்கிறது. அதுவே இறக்குமதி செய்தால் அல்லது கூடுதலாக வாங்கி வந்தால் செய்கூலி, இறக்குமதி வரி, நாணய மாற்று செலவுகள், வரி விதிகள் மற்றும் ஜிஎஸ்டி என பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டி வரும். இப்போது தங்கம் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமும், ஜிஎஸ்டி 3 சதவீதமாகவும் உள்ளது.

முக்கிய விதிகள்

முக்கிய விதிகள்


இந்திய வரி விதிகளின் கீழ், தனிநபர்கள் துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்து வரி இல்லாமல் குறைந்த அளவில் தான் தங்க நகைகளை வாங்கி வர அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அல்லது ஆபரணங்கள் வடிவில் மட்டுமே கொண்டு வர முடியும். ஆபரணங்களைத் தவிர வேறு எந்த வடிவத்திலும் தங்கம் அல்லது வெள்ளியைத் தனிநபர்கள் வாங்கி வர அனுமதிக்கப்படுவதில்லை.

எவ்வளவு அனுமதி?

எவ்வளவு அனுமதி?

துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் ஒரு வருடத்திற்கு மேல் அங்கி இருந்து திரும்பி வரும் போது 20 கிராம் தங்க நகைகள் என 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வரி இல்லாமல் வாங்கி வர அனுமதிக்கப்படுகிறார்கள். பெண் பயணிகள் என்றால் 40 கிராம், அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை அனுமதிக்கப்படுவார்கள். 1 வயதுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் அவர்கள் பெயரில் தங்கம் வாங்கி வரலாம். 1 வருடத்திற்கும் குறைவாக வெளிநாட்டில் தங்கினால் 36% இறக்குமதி வரி அரசால் விதிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Much Gold Is Allowed From Dubai To India Without Duty?

How Much Gold Is Allowed From Dubai To India Without Duty? Male passenger can brting 20 grams worth upto Rs 50 thousand, If female passenger upt 40 grams or wrth upto Rs 1 Lakh. |
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X