இந்தியர்கள் தங்கத்தை ஒரு முதலீடாகப் பார்ப்பதைவிட நகைகளை வாங்கி அணியவே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் வட நாட்டு மக்கள் பெரும்பாலும் தங்கக் கட்டிகளாக வாங்குவது வழக்கமாக கொண்டு உள்ளனர்.
ஆனால் கடந்த 10 வருடத்தில் இந்தியா முழுவதும் மக்கள் சற்று உஷாராகி செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை தவிர்க்க அதிகளவில் தங்க நாணயங்களாக வாங்க துவங்கியுள்ளது. இதை முதலீட்டு வல்லுனர்களும் ஆதரித்தாலும், தங்க பத்திரத்தை அதிகம் பிரிந்துரை செய்கின்றனர், எப்படி இருந்தாலும், தங்கம் தங்கம் தான்.

இதேபோல் இந்திய பெண்கள் தங்க நகைகளை அலங்காரத்துக்காக மட்டுமே வாங்கும் காலம் மறைந்து இப்போது தங்கத்தை பல வடிவங்களில் வாங்கி சேமிக்கும் நடைமுறைக்கு வந்துள்ளனர். வங்கிகளின் கோல்டு பாண்டு, வெர்ச்சுவல் கோல்டு பாண்டு போன்ற வகைகள் வந்து விட்டன.
தங்கத்தை நினைத்த நேரத்தில் விற்று பணமாக்கிக் கொள்ளலாம் என்பதால் இது சிறந்த முதலீடாகப் பார்க்கப்படுகிறது. இப்படி ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம் என்று தெரியுமா? ஏனென்றால் அதற்காக வருமான வரித்துறை சட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் தங்க நகைகளும் தங்க பிஸ்கட்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இந்தத் தங்கத்தை அப்படியே பறிமுதல் செய்வதற்கு வருமான வரித்துறையினருக்கு அனுமதியில்லை.
ஏனென்றால் தங்க நகைகள் மக்களால் ஒரு முதலீடாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே மத்திய நேரடி வரிகள் வாரியம் 1994 இல் ஒரு அறிக்கையை வெளியிட்டது, இது வருமான வரி அதிகாரிகளுக்கானது.
சோதனையின் போது தங்க நகைகள் அல்லது தங்க பிஸ்கட்கள் குறிப்பிட்ட அளவு வரை மக்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள், இதனால் இந்த அளவை தாண்டி இருக்கும் தங்கத்தை மட்டுமே பறிமுதல் செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, குடும்ப உறுப்பினர்களுக்கு தனி அளவு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டன. திருமணமான பெண்ணிடம் 500 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருந்தால் அதை வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யக் கூடாது. திருமணமாகாத பெண்ணிடம் 250 கிராம் வரை தங்க நகைகள் இருந்தால் அதுவும் பறிமுதல் செய்யப்படாது.
திருமணமான அல்லது திருமணமாகாத ஆண் உறுப்பினரிடம் 100 கிராம் வரையிலான தங்க நகைகள் இருந்தால் பறிமுதல் செய்யப்படாது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த அளவு வரம்பு குடும்பத்தில் ஒவ்வொருத்தருக்கும் தனியானது. அதாவது குடும்பத்தில் இரண்டு திருமணமான பெண் உறுப்பினர்கள் இருந்தால், மொத்தம் ஒரு கிலோ தங்கம் வைத்திருக்கலாம்.
ஆண்கள் எண்ணிக்கையின்படி தலா 100 கிராம் தங்கம் வைத்திருக்கலாம். இதனால் தேவையின்றி தங்க நகைகளை பறிமுதல் செய்வது தடுக்கப்படுகிறது. இதேவேளையில் இந்த தங்கத்திற்கும் போதுமான நிதி ஆதாரத்தை காட்ட வேண்டும், இல்லையெனில் இதையும் பறிமுதல் செய்யப்படலாம்.
அதேவேளையில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் இந்த அறிவுறுத்தல் தங்க நகைகளை வைத்திருக்க எந்த சட்டப்பூர்வ உரிமையையும் வழங்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
முன்னதாக, இந்தியாவில் தங்கக் கட்டுப்பாடு சட்டம், 1968 அமலில் இருந்தது. இதன்படி, மக்கள் குறிப்பிட்ட வரம்புக்கு மேல் தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்தச் சட்டம் ஜூன் 1990ல் ரத்து செய்யப்பட்டது. மீண்டும், தங்கம் வைத்திருப்பதற்கு வரம்புகளை நிர்ணயிக்கும் எந்தச் சட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தவில்லை. தற்போது, ஒரு நபர் அல்லது குடும்பத்தினர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சட்ட வரம்பு இல்லை.
Story Written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

தங்கத்தை ஓரம் கட்டும் வெள்ளி! உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம்..ஏன் இந்த மாற்றம்?



Click it and Unblock the Notifications