மும்பை: இந்தியாவில் பெரிய நகரங்களுக்கு சென்றாலே போதும் ஏதேனும் ஒரு வேலை பெற்று பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அப்படி பலரது கனவு நகரமாக இருக்கிறது மும்பை.
இந்தியாவின் நிதி தலைநகர் என அழைக்கப்படும் மும்பையில் ஒரு சாதாரணமான வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு நபர் எவ்வளவு செலவிட வேண்டும் என்பது குறித்து ஏவிஎஸ்ஏஆர் என்ற நிறுவனமும் எக்னாமிக் டைம்ஸும் இணைந்து ஒரு ஆய்வினை நடத்தி முடிவினை வெளியிட்டுள்ளன.

போக்குவரத்து செலவு:
மும்பையில் பெரும்பாலான இடங்களுக்கு செல்வதற்கு புறநகர் ரயில் போக்குவரத்து வசதி இருக்கிறது என்பதால் மேற்கு மும்பையில் வசிப்பவர்கள் மாதந்தோறும் 500 லிருந்து 1200 ரூபாய் வரை செலவிட வேண்டி இருக்கிறது. ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள் ஒரு மாதத்திற்கு 2000 லிருந்து 4000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டுமாம்.
ஆடம்பரமான பகுதியாக கருதப்படும் தெற்கு மும்பை பகுதியில் ரயில் போக்குவரத்துக்காக மாதம் 600லில் இருந்து 1500 ரூபாய் வரையிலும் , ஆட்டோவில் சென்று வர விரும்புவர்கள் மாதத்திற்கு 3000 முதல் 5000 ரூபாய் வரையும் செலவிடுகிறார்கள். தானே மற்றும் நவி மும்பையில் வசிப்பவர்கள் ரயில் போக்குவரத்துக்காக மாதந்தோறும் நான் 1000 ரூபாயையும், ஆட்டோக்களில் பயணம் செய்ய விரும்புபவர்கள் மாதத்திற்கு 1500 முதல் 3000 ரூபாய் வரையிலும் செலவு செய்கின்றனர்.
உணவு:
மேற்கு மும்பை பகுதியில் வசிப்பவர்கள் மாதம்தோறும் சராசரியாக 10,000இல் இருந்து 12,000 ரூபாய் வரை உணவுக்காக செலவிடுகின்றனர். இது அன்றாட உணவு மற்றும் அவ்வப்போது வெளியில் உணவகம் சென்று உட்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியது.
தெற்கு மும்பையில் வசிப்பவர்கள் மாதத்திற்கு 12000இல் இருந்து 15,000 ரூபாய் வரை செலவு செய்கின்றனர். நவி மும்பை மற்றும் தானேவில் வசிப்பவர்கள் மாதத்திற்கு 8000 லிருந்து 10,000 ரூபாய் வரை உணவுக்காக செலவு செய்கின்றனர்.
வீட்டு வாடகை :
மேற்கு மும்பை பகுதியில் சராசரியாக ஒரு படுக்கையறை கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு 35,000 முதல் 50,000 ரூபாய் வரை மாத வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. இதுவே இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு என்றால் 60,000இல் இருந்து 1,00,000 ரூபாய் வரை வாடகை வழங்க வேண்டும்.
தெற்கு மும்பை பகுதியில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டிற்கு 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலும், இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகளுக்கு 1 லட்சத்திலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் வீட்டு வாடகை செலுத்த வேண்டி இருக்கும்.
தானே மற்றும் நவி மும்பை பகுதியில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு 15,000 முதல் 30,000 ரூபாய் வரையிலும் வாடகை வசூல் செய்யப்படுகிறது. இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகளுக்கு 30,000 முதல் 60,000 ரூபாய் வரை வாடகை பெறப்படுகிறது .
மற்ற செலவினங்கள் :
மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்டவருக்காக 3 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டி இருக்கும். பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக மாதத்திற்கு 4000 ரூபாய் வரையிலும் செலவிட வேண்டி இருக்கும். இது ஒரு ஒருவருடைய வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது.
எவ்வளவு ஊதியம் கிடைக்கிறது?
மேற்கு மும்பை பகுதியில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் தொடக்கநிலை பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்குகின்றன. தெற்கு மும்பையில் 4 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலும், நவிமும்பை மற்றும் தானேவில் ஆண்டுக்கு 2.50 இலட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரையிலும் ஊதியம் வழங்கப்படுகிறது.
5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான அனுபவம் கொண்டவர்களுக்கு மேற்கு மும்பையில் 8 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலும் , தெற்கு மும்பையில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலும் ஆண்டு சம்பளம் கிடைக்கிறது. தானே மற்றும் நவி மும்பையில் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் என ஊதியம் வழங்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications