SUV காரின் விலையில் சுமார் 50% வரி.. இது தான் இந்தியாவின் வளர்ச்சியா?

டெல்லி: இந்தியாவில் வரி விதிப்பு நடைமுறைகள் குறித்து பலரும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன் வைப்பதுண்டு. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் மீது மத்திய அரசு அதிகவரி சுமையை சுமத்துகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுதுகிறது.

SUV காரின் விலையில் சுமார் 50% வரி.. இது தான் இந்தியாவின் வளர்ச்சியா?

அந்த வகையில் ஏ.கே.மந்தன் என்ற செபியில் பதிவு செய்த நிதி ஆலோசகர் "நீங்கள் இந்தியாவில் ஒரு எஸ்யூவி காரை வாங்குகிறீர்கள் என்றால் அதில் 50 சதவீத தொகையை நீங்கள் வரியாக மட்டுமே அரசுக்கு செலுத்த வேண்டி இருக்கும்" என தெரிவித்துள்ளார். அதாவது நீங்கள் வாங்கிய சம்பளத்திற்கு வரி செலுத்துவீர்கள், மூலதனங்கள் மூலம் உங்களுக்கு கிடைத்த ஆதாயத்திற்கு வரி செலுத்துகிறீர்கள், இவை அனைத்தையும் தாண்டி நீங்கள் சொந்தமாக வாங்கக்கூடிய காருக்கும் நீங்கள் வரி செலுத்துவீர்கள் என தெரிவித்துள்ளார். இதுதான் இந்தியாவின் வளர்ச்சி கதை என அவர் பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய பதிவில் எக்ஸ்யூவி 700 டீசல் காரை வாங்கியதற்கான ரசீதனை புகைப்படமாக பதிவு செய்துள்ளார். அதில் காரின் விலை 14,58,783.78 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காருக்காக மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி அதாவது எஸ்ஜிஎஸ்டி 14 சதவீதம், அதாவது 2,04,229.73 ரூபாய், சிஜிஎஸ்டியும் 14 சதவீதம் அதாவது 2,04,229.73 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

அது மட்டும் இன்றி செஸ் அவுட்புட் என 20% வரி வசூல் செய்யப்படுகிறது, 2,91,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது இந்த காரின் விலை 14,58,783 ரூபாய், இதற்காக அவர் செலுத்திய வரி கிட்டத்தட்ட 6,99,000 ரூபாய் ஆகும். மொத்தமாக இந்த எஸ்யூவி காருக்காக அவர் செலுத்திய வரி மட்டும் 48 சதவீதம் ஆகும். அவருடைய இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய கருத்தினை வெளியிட்டுள்ளனர். முன்னதாக மற்றொரு நிதி ஆலோசகரான அக்சத் ஸ்ரீ வாஸ்தவா இந்தியாவில் மறைமுக வரிகள் அதிகமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். உலகிலேயே இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் தான் மறைமுக வரிகள் அதிகமாக இருக்கின்றன எனக் கூறியிருந்தார். இந்தியாவில் ஜிஎஸ்டி விகிதம் 5% முதல் 28% வரை விதிக்கப்படுவதை குறிப்பிட்டு அவர் அந்த பதிவை வெளியிட்டு இருந்தார் .

ஐரோப்பாவில் அதிகபட்ச வரி வசூல் செய்யப்படுகிறது ஆனால் அங்கே நம் நடப்பதற்கான நடைபாதைகள் முறையாக இருக்கும், இங்கே இவ்வளவு தொகையை நாம் வரியாக செலுத்தி விட்டு பதிலுக்கு அரசாங்கத்திடம் இருந்து என்ன பெறுகிறோம் என்ற கேள்வியை முன் வைத்துள்ளார். நீண்ட காலம் முதலீடு செய்து செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு வரி என்ற பெயரில் அரசு தண்டனை வழங்குகிறது என்ற ஒரு கருத்தையும் அவர் முன் வைத்திருந்தார். இந்தியாவில் மூலதன ஆதாய வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+