இன்றைய சூழலில் விரைவான புகழ், வெற்றி ஆகியவற்றை மட்டுமே இலக்காக கொண்டு பலர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையான வெற்றி கடின உழைப்பில் தான் இருக்கிறது. இதற்கு சான்றாக ராமேஸ்வரம் கஃபே உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு இன்று இந்த பிராண்டை ரூ. 60 கோடி சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளனர்.
ராகவ் மற்றும் திவ்யா ஆகிய இருவர் இணைந்து நிறுவிய நிறுவனம் தான் ராமேஸ்வரம் கஃபே. 2021-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பிராண்டு தற்போது உணவு துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக உள்ளது, இந்தியா முழுவதிலும் பாரம்பரியமிக்க இயற்கை உணவு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவை வழங்கி வருகிறது. ராமேஸ்வரம் கஃபேவில் சுவையான இட்லிகள், தோசைகள் மற்றும் பாரம்பரிய தென்னிந்திய உணவுகள் கிடைக்கின்றன.

போராட்டங்களில் இருந்து கிடைத்த வெற்றி: ராகவ்விற்கு நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்த நிராகரிப்பை மட்டுமே பார்த்து வந்துள்ளார். மேலும் சில ஆண்டுகள் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்துள்ளார். அதன் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு தனது பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றார். தொழில் செய்ய வேண்டும் என்று யோசித்த ராகவ், தனது முதல் முயற்சியாக இட்லி, தோசை விற்கும் சாலையோர கடையைத் தொடங்கலாம் என்று யோசித்துள்ளார்.
இதற்கு அப்படியே நேர்மாறாக IIM அகமதாபாத் பட்டதாரியான திவ்யா ஆண்டுக்கு கோடிகளில் சம்பாதித்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். இருப்பினும் ராகவ்-வின் கனவிற்காக தனது வேலையை விட்டு, அதோடு தனது CA பயிற்சியையும் கைவிட்டார்.
இருவரும் சேர்ந்து 2021-ஆம் ஆண்டில் ராமேஸ்வரம் கஃபேவை இணைந்து நிறுவினர். இருவருடைய நோக்கம் என்னவென்றால் உயர்தர மற்றும் மலிவான விலையில் தென்னிந்திய உணவுகளை சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் வழங்குவதாகும். வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை போலவே எந்தவித செயற்கை நிறங்கள் இல்லாத உணவுகளை வழங்குவதில் இருவரும் குறியாக இருந்தனர்.
தற்போது இந்நிறுவனம் பல்வேறு பிரான்ச்களை கொண்டுள்ளது. திவ்யா நிதி சார்ந்த விஷயங்களை நிர்வகித்து வருகிறார். அதே நேரத்தில் ராகவ் உணவகத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறார். பெங்களூரு இந்திரா நகரில் முதல் முதலாக தங்களுடைய உணவகத்தை இந்த தம்பதியினர் தொடங்கினர். தொடக்க நாளிலேயே கிட்டத்தட்ட 1000 வாடிக்கையாளர்களுக்கு மேல் குவிந்தனர். தற்போது இந்த நிறுவனம் ரூ.60 கோடி சாம்ராஜ்யத்தை கொண்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. மும்பை மற்றும் புனேவில் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த தம்பதியினர் செயல்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications