தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என எண்ணுபவர்களுக்கு படிப்பு ஒரு தடை கிடையாது என்பதற்கு உதாரணமாக மாறி இருக்கின்றனர் இரண்டு பெண்கள். ஒருவர் கர்நாடகா மாநிலத்தையும் மற்றொருவர் கேரளாவையும் சேர்ந்தவர் ஆவார்.
அண்மையில் தென்னக பால் உற்பத்தியாளர் மாநாடு நடைபெற்றது . இதில் கர்நாடக மாநிலத்தின் சிறந்த பால் விவசாயி என்ற பட்டத்தை பெற்றார் 47 வயதான மங்களம்மா. இவர் பால் விற்பனை செய்வதன் மூலம் மட்டும் ஒரு ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானமாக ஈட்டுகிறார். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் மங்களம்மா.

இவர் முப்பது மாடுகள் மற்றும் இரண்டு எருதுகளை வைத்துக்கொண்டு கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த வருமானம் 30 லட்சம் ரூபாய் ஆகும். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் மங்களம்மாவின் பேட்டியும் இடம் பெற்றிருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் மங்களம்மாவும் அவருடைய கணவரும் இணைந்து மாடு வளர்த்து நாம் பால் விற்பனை செய்யலாம் என முடிவெடுத்தார்களாம். இதற்காக ஏற்கனவே மாட்டுப் பண்ணை வைத்திருக்கும் நபர்களை சந்தித்து எப்படி இதனை செயல்படுத்த வேண்டும் என்ற அறிவை பெற்றுக் கொண்டார்கள். தொடக்கத்தில் தங்களிடம் போதிய பணம் இல்லாததால் தங்களிடம் இருந்து சிறிய நிலத்தில் ஒன்று இரண்டு மாடுகளை வாங்கி வைத்து வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த மாடுகளுக்கு சத்தான தீவனத்தை மட்டுமே வழங்க வேண்டும் என முடிவு செய்த அவர்கள் மக்காச்சோளம் போன்ற தானியங்கள், எண்ணெய் கேக் போன்றவற்றை உணவாக வழங்கியுள்ளனர். இது பசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் தரமான பால் உற்பத்தி செய்யப்படுவதையும் உறுதி செய்கிறது எனக் கூறும் மங்களம்மா இதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம் என தெரிவித்துள்ளார்.
இவர்களுடைய பால் பண்ணையில் ஒரு நாளைக்கு 300 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தற்போது இவர்களுடைய பால் பண்ணை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு செய்யப்பட்டுள்ளது. மங்களம்மாவின் பிள்ளைகளும் இந்த பால் பண்ணையிலேயே தற்போது பணி புரிகின்றனர். இவர் தன்னுடைய கிராமத்தில் பலருக்கும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளார்.
இதே போல கேரள மாநிலத்தின் சிறந்த பால் விவசாயி என்ற பட்டத்தை ஒரு பெண் தான் தட்டி சென்றார். விது ராஜீவ் என்ற கோட்டயத்தை சேர்ந்த பெண்மணி கேரள மாநிலத்தின் சிறந்த பால் உற்பத்தியாளர் என்ற பட்டத்தை வாங்கினார். இவர் கடந்த ஆண்டு ஒரு லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து 50 லட்சம் ரூபாயை வருமானமாக ஈட்டி இருக்கிறார். இவர் கேரள மாநில அரசின் பால் மேம்பாட்டு கழகத்திற்கு பால் உற்பத்தி செய்து வழங்குகிறார்.
தன்னுடைய பால் பண்ணையில் அறிவியல் ரீதியிலான மேலாண்மை பராமரிப்புகள் நடைமுறையில் இருக்கின்றன என கூறும் அவர் மாடுகளுக்கு தானாகவே தீவனம் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்படும் முறை பண்ணையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications