சென்னை: நாட்டிலுள்ள பலரும் நகை கடைகளுக்குச் சென்று தான் நகைகளை வாங்கி வருகின்றனர். ஆனால் நீங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாகவும் நகைகளை வாங்க முடியும். நாளை அட்சய திருதியை என்பதால், தங்க நகைகளுக்கான தேவை அதிகம் இருக்கும். அதற்கு உதவும் வகையில், வீட்டில் இருந்தே எவ்வாறு ஆன்லைனில் தங்கம் வாங்குவது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
MMTC-PAMP என்ற இணையதளத்தின் மூலம், நீங்கள் தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் தங்க பார்கள், வெள்ளி பார்கள் போன்றவற்றை ஆன்லைன் மூலமாக வாங்க முடியும். இந்த MMTC-PAMP இணையதளம் லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் (LBMA) அங்கீகாரம் பெற்றுள்ளது.

இங்கு விற்கப்படும் அனைத்து பொருட்களும் தரமானவை. ஆனால், நீங்கள் கேஷ் ஆன் டெலிவரி (COD) மூலம் பணத்தை செலுத்த முடியாது. ஆன்லைன் ஆர்டர் மூலமாக ப்ரீபெய்ட் கட்டணங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. MMTC-PAMP இணையதளத்தில் எவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வாங்க முடியும் என்பதைப் பார்ப்போம்.
நாளை அட்சய திருதியை என்பதால் பலரும் தங்க நகை வாங்க முடிவெடுத்து இருப்பீர்கள். பொதுவாகவே, அட்சய திருதியை மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது, இந்த ஆண்டு நாளை கொண்டாடப்பட உள்ளது. தங்கநகை கடைகளின் கூட்ட நெரிசலைத் தவிர்த்து தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஆன்லைன் மூலமாக வாங்கலாம்.
MMTC-PAMP இணையதளத்திலிருந்து கோல்டு பார்கள், வெள்ளி பார்கள் போன்றவற்றை தனிஷ்க் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளில் இருந்து வாங்கலாம்.
MMTC-PAMP இணையதளம் மினரல்ஸ் அன்ட் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (MMTC) மற்றும் PAMP நிறுவனத்தின் கூட்டு முயற்சியாகும்.
MMTC-PAMP இணையதளத்தில் எவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளி பார்களை வாங்குவது?:
ஸ்டெப் 1: MMTC-PAMP இணையதளத்தின் மூலம் தங்கம், வெள்ளி நாணயங்கள் அல்லது கோல்ட் பார்கள் போன்றவற்றை ஒருவர் வாங்க விரும்பினால் கிரெடிட் கார்டு, UPI, நெட் பேங்கிங் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.
அதே போல் இந்த MMTC-PAMP இணையதளத்தில் தங்க மற்றும் வெள்ளி நகைகளை வாங்க முடியாது. தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், பார்கள் போன்றவற்றை மட்டுமே வாங்க முடியும்.
ஸ்டெப் 2: MMTC-PAMP இணையதளத்தில் ஃபில்டர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதைப் பயன்படுத்தி எந்த விலையில், உங்களுக்குப் பொருள்கள் வேண்டும் என்பதை, நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகு "Buy Now" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: அதன் பிறகு, உங்கள் ஊரின் Pincode-ஐ கொடுத்து 'Check' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம், நீங்கள் தேர்வு செய்த பொருள், உங்கள் ஊருக்கு டெலிவரி செய்யப்படுமா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டெப் 4: தற்போது "Checkout securely" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். நீங்கள் புதிதாக இந்த இணையதளத்திற்கு வருபவர், என்றால் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும் அல்லது நீங்கள் உங்களுடைய தகவல்களை வைத்து லாகின் செய்து கொள்ளலாம்.
ஸ்டெப் 5: அதன் பிறகு நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பிய பொருள் வீட்டிற்கு வர தேவைப்படும் முகவரி விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
ஸ்டெப் 6: இறுதியாக, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது UPI ஆப்ஷன் கொண்டு, நீங்கள் பணத்தை செலுத்தலாம்.
MMTC-PAMP இணையதளத்தில் தங்கம் வாங்குவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: MMTC-PAMP மூலம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வாங்குவது எளிது, என்றாலும் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
1) MMTC-PAMP இணையதளத்தின் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி பார்கள் அல்லது நாணயங்களை வாங்கினால், அவற்றை தேவைப்பட்டால், அதே இணையதளத்தில் மீண்டும் விற்கலாம்.
2) தங்க நாணயங்களின் தூய்மை மற்றும் தங்கம் விற்கும் நேரத்தில் உள்ள விலையின் அடிப்படையில் பணத்தைப் பெற முடியும்.
3) ரூ. 2 லட்சத்துக்கு மேல் தங்கம் மற்றும் வெள்ளி பார்களை வாங்கினால், கண்டிப்பாக பான் கார்டு விவரங்கள் முக்கியம்.
4) அதேபோல், மூன்றாம் தரப்பு கொரியர் நிறுவனங்கள் மூலம் நீங்கள் ஆர்டர் செய்யப்பட்ட தங்க நாணயங்கள் மற்றும் பார்கள், உங்களை வந்தடையும்.
5) ஆனால் நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து டெலிவரிக்கு எடுக்கும் நாட்கள் மாறுபடலாம். அதேபோல் இரண்டு கவர்களுடன் பேக்கேஜ் செய்யப்பட்டு மெட்டல் பாக்ஸில், ஆர்டர் செய்த பொருள் உங்களை வந்தடையும்.
More From GoodReturns

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications