சென்னை: இந்தியாவில் ஒரே வரி விதிப்பு முறை அமலில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2017ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தி குட்ஸ் அண்ட் சர்வீசஸ் டேக்ஸ் (Goods and Services Tax) எனப்படும் ஜிஎஸ்டி முறை. வரி விதிப்பு முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இது செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் அண்மை காலமாக போலியாக ஜிஎஸ்டி ரசீதுகளை தந்து ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர்.
ஜிஎஸ்டி செலுத்தாமலேயே ஜிஎஸ்டி ரசீது வழங்கி ஏமாற்றுபவர்கள் அதிகரித்து விட்டனர். ஒரு ஜிஎஸ்டி ரசீது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டறிய எளிய வழிமுறை இருக்கிறது. அதனை விரிவாக பார்க்கலாம்.

1.GSTIN-ஐ சரிபார்த்தல்: ஒரு ஜிஎஸ்டி ரசீது அசலானது தானா என அறிய அந்த விற்பனையாளரின் GSTIN (Goods and Services Tax Identification Number)-ஐ முதலில் சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு விற்பனையாளருக்கும் 15 இலக்க GSTIN என்ற எண் வழங்கப்படுகிறது. மாநில குறியீடு, பான் எண், பதிவு எண் ஆகியவற்றை இது உள்ளடக்கியதாக இருக்கும். இந்த எண்ணை ஜிஎஸ்டி தளத்தில் உள்ளீடு செய்தாலே அனைத்து விவரங்களையும் சரிபார்க்கலாம்.
2. ஜிஎஸ்டி இன்வாய்ஸ் எண் என்பது தனித்துவமானதாகவும், ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் அமைந்துள்ளதா என பார்க்க வேண்டும். ஜிஎஸ்டி கட்டணங்களை பொறுத்தவரை ஜிஎஸ்டி தளத்தில் உள்ள கால்குலேட்டரை பயன்படுத்தி கணக்கு செய்து சரிபார்த்துக் கொள்ளலாம்.
3. விற்பனையாளரின் கையெழுத்தை சரிபார்த்தல்: ஜிஎஸ்டி ரசீதை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விற்பனையாளரின் அங்கீகரிக்கப்பட்ட கையெழுத்து அதில் இடம்பெற்றிருக்கும். எனவே உங்களிடம் உள்ள ரசீதில் இருக்கும் கையெழுத்து மற்றும் ஜிஎஸ்டி தளத்தில் உள்ள கையெழுத்துடன் பொருந்துகிறதா என அறிய வேண்டும்.
4. சம்பந்தப்பட்ட நபர் ஜிஎஸ்டி செலுத்தினாரா இல்லையா என்பதை சரிபார்க்கும் வசதியும் இப்போது வந்துவிட்டது. ஒரு வாடிக்கையாளர் ஒரு கடையில் ஒரு பொருளை வாங்குகிறார். அதில் விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை அந்த விற்பனையாளர் அரசுக்கு செலுத்திவிட்டாரா இல்லையா என்பதை அறிவது எளிது.
ஜிஎஸ்டி தளத்திலேயே முன்பே கூறியதை போல 15 இலக்க எண்ணை உள்ளீடு செய்தால், வரி செலுத்தப்பட்ட பிரிவில் அது காண்பிக்கும். அப்படி காண்பித்தால் அவர் வரி செலுத்தியது உறுதி., இல்லையெனில் அவர் வரி செலுத்தாமலேயே வரி செலுத்தியதாக பொய் கூறி உங்களிடம் கூடுதல் தொகையை வசூல் செய்கிறார் என பொருள்.
ஒரு வேளை உங்களுக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்டி ரசீது போலியானது என நீங்கள் கண்டறிந்தால் , உடனடியாக அதனை ஜிஎஸ்டி தளத்திலேயே புகார் அளிக்கலாம் அல்லது 1800-103-4786 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் புகாரை பதிவு செய்யலாம்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications